சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு, மின் அட்டையுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நாளையுடன் முடிகிறது, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி, அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு: மத்திய அரசு உத்தரவு, தமிழ்நாடு ரயில்வேயில் வேலைவாய்ப்பு, வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு களப்பயிற்சி முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: PM Kisan நிதி ரூ.8000 ஆகிறது|மின்மோட்டார் திட்டம்|விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் பரிசு|வேளாண் நிதிநிலை அறிக்கை|பயணிகளுக்கு இலவச உணவு
1. சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு!
விவசாயிகளின் வருமானத்தினை அதிகரிக்கத் தமிழ்நாடு அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயத்திற்கெனத் தனி பட்ஜெட்டினைத் தாக்கல் செய்து, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், 2022-23ஆம் ஆண்டின் வேளாண்மை துறை மானியக் கோரிக்கையில் சம்பா நெல் அறுவடைக்குப்பின்பு, உளுந்து, பச்சைப்பயறு 10 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திட ஏக்கருக்கு ரூ.400 வீதம் மானியம் வழங்குவதற்காக, 2022-23ஆம் ஆண்டில் ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும், இதன்மூலம் தமிழகத்தின் பயறு உற்பத்தி 2 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உயரும் என்பதுடன்,12 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. மின் அட்டையுடன் ஆதாரை இணைக்க அவகாசம் நாளையுடன் முடிகிறது!
தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் இருக்கின்றன. இதில் வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இது தவிர விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு தொடர்ந்து வருகின்றது. இந்த நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31-ம் தேதி அதாவது நாளை தான் கடைசி நாளாகும். இந்த சூழலில், மின் நுகர்வோர்கள் குறித்த முறையான டேட்டாவை பெறும் வகையில், மின் நுகர்வோர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்து இருக்கிறது.
மேலும் படிக்க: ட்ரோன் மானியம்|புதிய கூட்டுறவு நிலையங்கள்|TNAU|FPO Call Center|HDFC|தங்கம் விலை|காய்கறி விலை|வானிலை
3. விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி!
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்கப்பட இருக்கிறது. பொருளீட்டு கடன் குறைந்த வட்டியில், விவசாயிகளுக்கு 5% வட்டி அதிகபட்சம் 3 லட்சம் வரை கடனும், வியபாரிகளுக்கு 9% வட்டி அதிகபட்சம் 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் மற்றும் விற்பனைக்குழு செயலாளர் தொடர்புக்கொண்டு பயனடைய வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
4. அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு: மத்திய அரசு உத்தரவு!
எல்லா விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டுகளை வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிசான் கிரெடிட் கார்டு வாயிலாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு குறைந்த வட்டி விதிக்கப்படுவது மட்டுமல்லாமல், வட்டி மானியமும் அரசிடம் இருந்து கிடைக்கிறது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும்படி வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்கி துறை செயலாளர் விவேக் ஜோஷி தலைமையில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் வங்கித்துறை குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கும்படி பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுக்கு விவேக் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக பிஎம் கிசான் தகவல் தளத்தை பயன்படுத்திக்கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Ration Card: புதிய ரேஷன் கார்டு|நெல் கொள்முதல் நிலையங்கள்|FPO Call Center|பால்பண்ணைத் தொழில்|இ-சந்தை
5. தமிழ்நாடு ரயில்வேயில் வேலைவாய்ப்பு!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்-இல் காலியாக உள்ள GM, Vigilance Officer பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, தேவையான கல்வித்தகுதியாக B.E, B.Tech, MBA, Graduate ஆகியவை உள்ளன. தமிழ்நாடு அரசு வேலையில் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்ரல் 25 வரை வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Chennai-யில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
6. வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு களப்பயிற்சி!
அவிநாசி, ராயகவுண்டன்புதுாரில் நடந்த கால் நடைகளுக்கான அம்மை நோய் தடுப்பு முகாமில், குமரகுரு வேளாண்மை கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று, மருத்துவர்களின் சிகிச்சை முறையை அறிந்துகொண்டனர். மேலும், அசோலா பயிர் வளர்ப்பு குறித்த செயல் முறையை அறிந்து, செய்து காண்பித்தனர். அவர்களுககு கல்வி சார்ந்த விளக்கத்தினைக் கால்நடை மருத்துவர்கள் வழங்கினர். மேலும், மீனமிலம் தயாரிப்பு முறை பற்றியும், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் எடுத்துக் கூறி விவசாயிகளுக்கு செயல் முறை விளக்கம் அளித்தனர்.
7. TANCET 2023: தேர்வு தேதி வெளியீடு!
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான TANCET தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. MCA, M.E, M.Tech, M.Arch படிப்புகளுக்கான TANCET தேர்வு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் மார்ச் மாதம் இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்த இந்த தேர்வு குறித்த தேதி குறித்த விவரம், தற்போது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
8. முதன் முதலாக தமிழில் தொடங்கப்பட்ட மருத்துவ மாநாடு! தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மருத்துவர் மோகன் காமேஸ்வரனின் முன்முயற்சியால் தமிழிலேயே நடைபெறும் "காது, மூக்கு, தொண்டை, தலை & கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
9. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5320 அதிகரிப்பு- அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவது பெண்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்கம் விலை கடந்த ஆண்டு நவம்பர் சவரன் ரூ.37,720-க்கு விற்கப்பட்டது. ஆனால் 2 மாதங்களில் சவரனுக்கு 5320 ரூபாய் அதிகரித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கம் டிசம்பர் மாதம் 31-ந்தேதி சவரன் ரூ.41 ஆயிரத்தை தாண்டியது. அன்று 1 சவரன் தங்கம் ரூ.41,040 ஆக விற்கப்பட்டது. தற்பொழுது 1 பவுன் தங்கம் ரூ.42,760-க்கு விற்கப்பட்டது. ஒரே நாளில் பவுனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.43,040-க்கு விற்பனையாகிறது.
மேலும் படிக்க
2022-23: சம்பா நெல் தரிசில் பயறு சாகுபடி மேற்கொள்ள acre-க்கு ரூ.400/- மானியம்
Share your comments