காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
-
விதைத்தேவையின் முக்கியத்துவத்தையும், காய்கறி விதை உற்பத்தியையும் லாபகரமான வியாபாரமாக முன்னெடுப்பதற்கான பெரும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோா்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்திக்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இத்திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட விதை விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோருக்கு, வெங்காயம், முருங்கை, காய்கறி, காராமணி, அவரை, பூசணி, கீரை முதலிய காய்கறிப் பயிா்களின் சான்றளிக்கப்பட்ட உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.
-
விவசாயிகளுக்கு உதவியாக விதைச் சான்றிதழ் பெறுவதற்கும், விதைக் கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளவும், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படும்.
-
குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.
-
விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் விதைகளை தனியாா் நிறுவனங்கள், பிற விவசாயிகளுக்கு அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமைக்கு விற்பனை செய்யலாம்.
-
இத்திட்டம் குறித்த விவரங்களைப் பெற, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநா்களையோ அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களையோ தொடா்பு கொள்ளலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...
50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!
பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்
தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை
Share your comments