தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கான நியாயமான மற்றும் ஆதார விலையினை வழங்க வேண்டும் என ரூ. 252 கோடியினைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழகத்தில் கூடுதலாகச் சாகுபடி செய்யப்படும் பயிர்களில் ஒன்றாகக் கரும்பு சாகுபடி இருக்கின்றது. அதோடு, சர்க்கரை, வெள்ளம் தயாரிப்பிலும் தமிழகம் முன்னுரிமையைக் கொண்டுள்ளது எனக் கூறலாம். இந்நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு என 252 கோடி ரூபாயைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
விவசாயிகளுக்கு வழங்க வேண்டி சர்க்கரை ஆலைகளுக்கு ரூ. 252 கோடி முன்பணமாக ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 12 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு இந்த தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகள் பயனடையும் வகையிலும், கரும்பு உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையிலும் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
ரூ. 70 ஆயிரம் கோடியைத் தாண்டிய திருப்பூர் பின்னலாடை வர்த்தகம்!
Share your comments