பெரியாறு வைகைப் பாசன நீரைப் பயன்படுத்தி நெல் நடவு செய்யும் விவசாயிகள், ஆள் பற்றாக்குறை காரணமாக வயதான நாற்றுகளை (Aging seedlings) நடுகின்றனர். வயதான நாற்றுக்களை நடுவதால் சீரான வளர்ச்சி குறைவதோடு துார்கள் அதிகமாக பிடிக்காமல் மகசூல் (Yield) குறையும்.
மகசூல் அதிகரிக்க:
வளர்ச்சி அதிகமுள்ள நாற்றுகளில், நுனியை கிள்ளி நடுவதன் மூலம் பூச்சிகளின் முட்டைகள் அழிவதோடு மழைக்காலங்களில், நடவுப்பயிர் சாய்ந்து அழுகாது. நடவு செய்யும் போது வரிசை நடவு முறையில் நெருக்கி நட வேண்டும். ஒரு குத்துக்கு ஒன்று அல்லது இரண்டு நாற்றுகள் நட்டால் அதிக மகசூல் (Yield) பெறலாம். மணற்பாங்கான மற்றும் சத்துக்குறைவான இடங்களில் சதுர மீட்டருக்கு 50 குத்துக்களுக்கு மேல் நட வேண்டும். ஆழமாக நடவு செய்தால் பயிர் வளர்ச்சி (Crop growth) தாமதமாவதோடு துார் எண்ணிக்கை குறையும். இதைத் தவிர்க்க, 3 செ.மீ. ஆழத்தில் நட்டால் போதும். நட்ட பிறகு 7 முதல் 10 நாட்களுக்குள் இடை நிரப்புதல் செய்யவேண்டும். இளம் பயிருக்கு தழைச்சத்தை ஏக்கருக்கு 35 கிலோ என்ற அளவில் அம்மோனியம் சல்பேட் (Ammonium sulphate) வடிவில் அளித்தால் துார்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
துத்தநாகம் சல்பேட்:
இலைவழி உரமாக 0.5 சதவீதம் துத்தநாகம் சல்பேட் (Zinc Sulphate) 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதன் மூலம் நெற்பயிரை பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம்.
சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள:
உதவி பேராசிரியர் சுப்ரமணியன்
உதவி ஆசிரியர் சதீஷ்குமார்
உழவியல் துறை,
மதுரை விவசாய கல்லுாரி
90034 28245.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments