சூரியகாந்தி பயிரில் தலைத்துளைப்பான், புகையிலைப் புழு கட்டுப்பாடு முறைகளைப் பின்பற்றி மகசூல் (Yield) இழப்பைத் தடுத்து அதிக லாபம் பெற முடியும்.
தலைத் துளைப்பான் புழு: தலைத் துளைப்பான் பயிரின் தலைப் பகுதியில் மட்டும் துளையிடும்.
அறிகுறிகள்:
- பயிரில் தலைப் பகுதியின் உள்ளே துளைகள் காணப்படும். நன்றாக வளர்ந்த விதைகளின் மீது புழுக்கள் உள்ளதற்கான அறிகுறி காணப்படும்.
- பூஞ்சான் உருவாகி, தலைப்பகுதி அழுகத் தொடங்கும். வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் புழுக்கள் (Worms) இலைகளை அதிகமாக உண்ண ஆரம்பித்து பின்னர் தலைப் பகுதியைத் துளைக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
- சூரியகாந்தியில் (Sunflower) ஊடு பயிராக பச்சைப் பயிறு, உளுந்து, கடலை, சோயாபீன் (Soybean) பயிரிடுவதன் மூலம் தலைத்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம். 3-க்கு 4 வரிசை என்ற அளவில் மக்காச்சோளத்தை பயிரைச் சுற்றி விதைக்கலாம்.
- பொறிப் பயிர்களாக ஏக்கருக்கு துலக்கமல்லி 50 செடிகள் என்ற அளவில் விதைக்கலாம்.
- ஏக்கருக்கு 4 இனக் கவர்ச்சிப் பொறிகள் வைத்தும் கட்டுப்படுத்தலாம். விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
- இரை விழுங்கிகளான காக்சி நெல்லி டிஸ், கிரைசோபெர்லா கார்னியா (Chrysoperla cornea) 1 புழு என்ற அளவில் வயலில் வெளியிடலாம்.
- ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிராமா பிரக்கான் (Trichogramma Bracken) வகைகள், கேம்போலெட்டிஸ் வகைகளை வயலில் வெளியிடலாம்.
- தகுந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை மாலை நேரங்களில் தெளிக்கலாம். 5 சதவீத வேப்பெண்ணெய் அல்லது 5 சதவீத வேப்பங்கொட்டைச் சாற்றை முட்டை இடும் முன் தெளிக்க வேண்டும்.
புகையிலைப் புழுவின் அறிகுறிகள்:
- பூச்சிகள் இளம் இலைகள், கிளைகள், இதழ்களை உண்ணும்.
- பின்னர் வயல் முழுவதும் பரவி, இலைகள் உதிரும்.
- வளர்ந்த விதைகளை புழுக்கள் உண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை:
- புகையிலைப் புழு தாக்கிய முட்டைகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
- பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை 4 மணிக்குப் பிறகு தெளிக்க வேண்டும். ஏனெனில், அப்போதுதான் தேனீக்கள் (Honey Bee) வரவு குறைவாக இருக்கும்.
- பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்க மருந்து (Growth stimulant) தெளித்த நாளில் பூச்சிக்கொல்லியை தெளிக்க வேண்டும்.
இத்தகைய தொழில்நுட்பமுறைகளைப் பின்பற்றி மகசூல் (Yield) இழப்பைத் தடுக்கலாம்.
தகவல் : உழவரின் வளரும் வேளாண்மை
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!
Share your comments