நெல், வாழை, தென்னை போன்ற வேளாண் பயிர்களுடன் சேர்த்து மீன் வளர்ப்பது. விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானத்தைத் தரும்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
இந்தியாவில் 6 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர் செய்யப்பட்டாலும், 0.03% மட்டுமே நெல் - மீன் வளர்ப்பு செய்யப்படுகிறது. இம்முறையில் பல நன்மைகள் காணப்படுகின்றன.
பயன்கள் (Benefits)
-
குறைந்தளவு நிலத்திலும் அதிக பொருளாதாரப் பயன்பாடு.
-
அதிக ஆட்கூலி தேவைப்படுவதில்லை.
-
களையெடுப்பு மற்றும் மீன்களுக்கு உணவளித்தல் போன்ற செயல்களுக்கான ஆட்கூலி தேவை மிச்சமாகும்.
-
அதிக நெல் விளைச்சல்.
-
விவசாயிக்கு வயலில் இருந்து நெல், மீன் கிடைப்பதுடன், வயல்வெளி ஓரங்களில் வெங்காயம், பீன்ஸ், போன்றவற்றின் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கிறது. எனவே நமது நாட்டில் நெல்வயலில் மீன் வளர்க்கும் முறையை அதிகப்படுத்துதல் அவசியமாகும்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
நெல் வயலில் 3 - 8 மாதங்கள் வரை நீர் தேங்கி இருக்கும். நெற்பயிர் அறுவடை முடிந்தபின் மீதமிருக்கும் நீரில் உள்ள மீன்கள் பயிரில்லாத காலத்தில் விவசாயிக்குக் கூடுதல் இலாபம் அளிக்கும். இதற்கு வயலில் சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
பிரத்யேக அமைப்புகள் (Specific items)
வட்டவடிவ குழிகள் தோண்டி கரைகள் கட்ட வேண்டும். குளம் போன்று உருவாக்கியபின் அதில் ஹெக்டேருக்கு 10,000 வரை மீன்குஞ்சுகளை விட வேண்டும். அவற்றிற்கு உணவாக அரிசி - உமி புண்ணாக்கு 2 - 3% உடல் எடைக்கு ஏற்றவாறு அளிக்கலாம்.
நெல் ரகங்கள் (Paddy Variety)
இவ்வாறு மீன் வளர்ப்பிற்கு ஏற்றவாறு பனிதன், துளசி, சி.ஆர் 260 77, ஏ.டி.ட்டி - 6,7, ராஜராஜன் மற்றும் பட்டம்பி 15,16 போன்ற நெல் இரகங்களைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த இரகங்கள் நீர்த்தேக்கத்திலும் நன்கு வளரக் கூடியவை. அதோடு இதன் வாழ்நாள் 180 நாள் வரை இருப்பதால் மீன்வளர்ப்பை நாற்று நட்டபின் ஆரம்பிப்பது மிகச் சரியான நடவடிக்கையாக இருக்கும். மீன்கள் விற்பனைக்கு உகந்த அளவு எடைக்கு வந்த பின்பு பிடித்துச்சென்று விற்றுவிடலாம்.
நெல் வயலில் மீன் வளர்ப்பு
நெல்வயலில் மீன் வளர்ப்பு இரு முறைகளில் செய்யப்படுகிறது.
சமகால வளர்ப்பு முறை
இதற்கு 0.1 ஹெக்டர் பரப்பளவு நிலமே போதுமானது. இதை நான்கு 250மீ (25 x 10 மீ) உள்ள பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் 0.75 மீ அகலமும், 0.5 மீ ஆழமும் கொண்ட குழி தோண்ட வேண்டும். இந்த அகழி வைக்கோல் பதியவைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும். 0.3மீ அகலம் கொண்ட நெல் வயலைச் சூழ்ந்திருக்க வேண்டும். இந்த அகழி இருபுறமும் சிறு வாய்க்காலால் இணைக்கப்பட வேண்டும்.
இந்த அகழிகள் நெற்பயிர் இல்லாத சமயத்தில் மீன்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதோடு தண்ணீர் குறையும் சமயத்தில் சேகரித்து வைக்கவும் உதவும். வளர்க்கும் மீன் வகையின் அளவு மற்றும் பயிரிடும் நெல் இரகத்தைப் பொறுத்து பராமரிக்கும் தண்ணீரின் அளவு மாறுபடும்.
இவ்வாறு நெல் வயலில் வளர்க்கப்படும் மீனானது குறைந்த ஆழத்தில் மேலேயே வளரக் கூடியதாகவும், 350 செல்சியஸ் வரை வெப்பநிலையைத் தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
அதோடு குறைந்த ஆக்ஸிஜனும் அதிக கலங்கல் தன்மை உள்ள நீரில் வளரும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும். கட்லா, ரோகி, மிர்கல், கார்ப்போ, முகில், சானோஸ், மொசாம்பிக்ஸ் போன்ற வகை மீன்களை வளர்க்கலாம்.
சுழற்சி முறை (Cycle Method)
இதைத்தவிர சுழற்சி முறையில் நெல் பயிரிட்டும், மீன் வளர்த்தும் விவசாயிகள் வருமானம் ஈட்டமுடியும்.
மேலும் படிக்க...
மனிதத் தோற்றத்தில் காட்சியளிக்கும் டிரிக்கர் மீன்கள்- வால்துடுப்பால் நீந்துவது அழகு!
குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் வெங்காயம் சாகுபடி முறை மற்றும் மருத்துவப் பயன்கள்!
Share your comments