மத்திய அரசும் மாநில அரசும் விவசாயிகளுக்குப் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகின்றன. கால்நடைகளில் மாடு, ஆடு, மீன் என விவசாயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்ட கால்நடைகளில் ஒன்றான ஆடுகளை வளர்ப்பதற்கு அரசே 4 லட்சம் வழங்குகிறது. அந்த வகையில் தமிழக அரசு, ஆடு வளர்ப்பதற்கு வழங்கக் கூடிய இந்த திட்டத்தைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
மேலும் படிக்க: TNPSC 2022 குரூப் 4 ஹால் டிக்கெட் வெளியீடு: இதோ Download Link!
ஆடு வளர்ப்புக்கு வழங்கக் கூடிய இந்த திட்டம் மூலம் யாரெல்லாம் பயன் பெறலாம், இந்த திட்டத்திற்கான விதிமுறைகள் என்னென்ன, திட்டத்தின் பயன்கள் என்ன, எவ்வாறு இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? போன்ற முழு விவரங்களை இப்பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!
பொதுவாக இக்காலக்கட்டத்தில் ஆட்டின் இறைச்சி அதிகமாகத் தேவைப்பட்டு வருகின்ற, இந்த சூழலில் ஆடுகளின் எண்ணிக்கையை, குறிப்பாகச் செம்மறி மற்றும் வெள்ளாடுகளின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஆடு வளர்ப்பு யோஜனா 2022 ஆகும்.
மேலும் படிக்க: தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்த, விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”!
ஆடு வளர்ப்பு யோஜனா 2022
சுயத் தொழில் மற்றும் விவசாயத்தினைக் கருத்தில் கொண்டு ஆடு வளர்ப்புக்கு இந்த திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆடு வளர்ப்பு யோஜனா 2022 மூலம் ஆடு வளர்ப்புக்கு வேண்டிய கடன் வசதிகளைச் செய்து கொடுக்கிறது. கிராமப் புறங்களில் இருக்கக் கூடிய கால்நடை வளர்ப்பாளர்களுக்காக மத்திய அரசு இந்த ஆடு வளர்ப்பு யோஜனாவைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆடு வளர்ப்புக்கு சுமார் 4 லட்சம் வரை கடன் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க: இனி விவசாயிகள் ஏரி குளங்களில் மண் எடுக்கலாம்! தமிழக அரசு உத்தரவு!
திட்டத்திற்கான தகுதிகள்
- இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- வயது வரம்பு என்று பார்க்கும்போது 18 முதல் 50 வயது வரை இருத்தல் வேண்டும்.
- ஆண்டு வருமானம் குறைவானதாக இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரர் விவசாயியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
மேலும் படிக்க: TNEB: ஆகஸ்டுக்குள் 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்பு! இன்றே விண்ணப்பியுங்கள்!
தேவையாண ஆவணங்கள்
- புகைப்படம்
- ஆதார்டு கார்டு
- பான் கார்டு
- கைபேசி எண்
- குடும்ப அட்டை
- வங்கிப் புத்தகம்
- இருப்பிடச் சான்றிதழ்
- வருமானச் சான்றிதழ்
- சாதிச் சான்றிதழ்
திட்டத்தின் நன்மைகள்
- இந்த திட்டத்தினைக் கொண்டு அனைவரும் சொந்தமாகத் தொழிலைத் தொடங்கலாம்.
- ஆடு வளர்ப்பில் குறைந்த பணத்தினை முதலீடாகக் கொண்டு அதிக லாபம் பெறலாம்.
- இதனை வழிநடத்த தொழில் நுட்ப அறிவு வேண்டியதில்லை.
மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!
மத்திய அரசின் இந்த திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளும் பல திட்டங்களை வழங்கி வருகின்றன. இது போன்ற திட்டங்களின் முக்கிய நோக்கம் என்பது விவசாயம் எனும் நிலையில் நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடைய வேண்டும் என்பதாக இருக்கின்றது. இதற்கெனவே பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துகொண்டு இருக்கின்றன. விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் எனக் கூறப்படுகின்றது.
மேலும் படிக்க
KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!
Share your comments