PM-Kisan: விவசாயிகள் வங்கி கணக்கில் ஆகஸ்டு முதல் ரூ.2000 செலுத்த திட்டம்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
centre pay its 6th installment to farmers
Credit : istock

பிரமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு மத்திய அரசு இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையை நாளை முதல் செலுத்த திட்டமிட்டுள்ளது. இதனால் 10 கோடி விவசாயிகள் பயன் பெறுவார்கள்.

PM-Kisan திட்டம்

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana) எனப்படும் பிரதமரின் விவசாய நிதித் திட்டத்தீன் கீழ் ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ.6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியைப் பெற விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் இணைந்திருக்கவேண்டும்.

2 வது தவனை

இந்த திட்டத்தில் இணைக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மத்திய அரசு இந்த ஆண்டுக்கான முதல் தவணையை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான இரண்டாவது தவணையை அரசு, ஆகஸ்ட் 1 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்த திட்டமிட்டுள்ளது. உங்களின் நிலை குறித்து அறிய https://pmkisan.gov.in/ மத்திய அரசின் இந்த அதிகார இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

farmers to get rs 2000 from tomorrow

உங்களின் நிலை எப்படி அறிவது (How to Know your Status)

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் - pmkisan.gov.in

  • முகப்புப்பக்கத்தில் 'Farmers Corner' என்பதைக் கிளிக் செய்க.

  • இப்போது ''beneficiary status' என்பதைக் கிளிக் செய்க.

  • உங்களின் ஆதார் எண் / கணக்கு எண் / மொபைல் எண் ஆகிய மூன்று விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்

  • பிறகு Get Date என்பதை கிளிக் செய்க

  • இப்போது உங்களின் விவரங்களை பார்க்கமுடியும்


மேலும் படிக்க...

ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

தொழில் தொடங்க விருப்பமா? ரூ.10 லட்சம் வரை கடன் தரும் முத்ரா திட்டம்

 

English Summary: Government to pay its Sixth Installment of PM-Kisan to farmers from august 1 Published on: 31 July 2020, 05:40 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.