வயது முதிர்வு காலத்தில் எவரையும் சார்ந்திராமல் நிம்மதியான தன்னிறைவான வாழ்வைப் பெற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இப்பதிவு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மாதம் ரூ.60000 தரும் பென்சன் திட்டத்தைக் குறித்துதான் இப்பதிவு விளக்குகிறது.
எந்த காலத்திலும் மகிழ்வாக வாழ வேண்டும் என்றால் சேமிப்பு என்பது மிகுந்த இன்றியமையாத ஒன்றாகும். நாம் ஒவ்வொருவருக்கும் சேமிப்புத் திட்டம் என்பது அவசியம் இருக்க வேண்டிய ஒன்று. அந்த வகையில் தினமும் ரூ7 செலுத்தி நம் கடைசி காலத்தில் ரூ.60000 பெறும் திட்டம் தான் அடல் பென்சன் திட்டம் ஆகும். இது அடல் பென்ஷன் யோஜனா என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த விரிவான தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: பெண்களுக்கு ரூ. 6000 கிடைக்கும் மத்திய அரசின் திட்டம்: இன்றே அப்ளை பண்ணுங்க!
அடல் பென்ஷன் யோஜனா திட்டம்
இந்த திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும். இது பொதுவாக ஆரம்பக் காலக்கட்டங்களில் அமைப்பு சாரா துறைகளில் பணிபுரியும் மக்களுக்காகத் தொடங்கப்பட்டது. ஆனால், இன்று அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக மாற்றப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 18 முதல் 40 வயதுடைய இந்திய குடியுரிமை பெற்ற அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுகிறது. எனவே, அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம் எனக் கூறப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
- ஆதார் அட்டை
- வங்கி கணக்குப் புத்தகம்
- தொலைப்பேசி எண்
மேலும் படிக்க: இனி உங்க காட்டில் பணமழைதான்! அதிக வருவாய் தரும் SB அக்கவுண்ட்!
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் குறைந்த பட்ச சேமிப்பு ரூபாயாக 1000-மும் அதிகபட்சமாக ரூ. 5000-மும் சேமிக்கலாம். இது ஒரு பாதுகாப்பான முதலீட்டுத் திட்டம் ஆகும். இந்த திட்டதின் 60 ஆண்டுகளுக்குப் பின் ஆண்டு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ. 210 அதாவது ஒரு நாளைக்கு ரூ. 7 போதும். தனது கடைசி காலத்தில் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெற்று ஆண்டு ஒன்ற்கு 60,000 பெறலாம்.
நாளொன்றுக்கு ரூ. 7 சேமித்தால் மாதம் ரூ. 5000 ஓய்வூதியம் பெறலாம். இதுவே மாதம் என்று பார்த்தால் மாதம் ரூ. 42 சேமித்தால் மாதம் ரூ. 1000 ஓய்வூதியமும், ரூ. 84 சேமித்தால் ரூ. 2000 ஓய்வூதியமும், மாதம் ரூ.126 சேமித்தால் மாதத்திற்கு ரூ. 3000 ஓய்வூதியமும், மாதம் ரூ.168 சேமித்தால் மாதத்திற்கு ரூ. 4000 ஓய்வூதியமும் பெறலாம். எனவே, விருப்பம் உள்ளவர்கள் சேமித்துப் பயனடையுங்கள்.
மேலும் படிக்க
50% மானியத்தில் டிராக்டர் வழங்கும் மத்திய அரசின் திட்டம்! இன்றே அப்ளை செய்யுங்க.!
Share your comments