சொட்டு நீர் பாசன அமைக்க மானியம்- திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் அழைக்க வேண்டிய நம்பர் விவரம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
good news for tirupathur farmers- subsidy details of drip irrigation

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாசன பணிகளுக்காக சொட்டு நீர் பாசன முறையினை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் மானியம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மவாட்டத்தில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கு 1400 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கபட்டு 11.42 கோடி மானியம் ஒதுக்கப்பட்டுள்ளது.

சொட்டு நீர் பாசனம் அல்லது நுண்ணீர் பாசனம் என்பது முதன்மை குழாய், துணைக்குழாய்கள் மற்றும் பக்கவாட்டு குழாய்கள் ஆகிய அமைப்புகள் வாயிலாக பயிர்களுக்கு தேவையான நீரை, துளித்துளியாக மண்ணின் மேற்பரப்பிலோ அல்லது பயிர்களின் வேர்ப்பகுதியில் நேரடியாகவோ வழங்கும் ஒரு மேம்பட்ட நீர்ப்பராமரிப்பு முறையாகும்.

நீராதாரம் குறைந்து வருவதாலும், சாகுபடி நிலப்பரப்பு குறைந்து வருவதாலும் வாழும் மக்களுக்கு உணவு அளிக்க உற்பத்தித் திறனை அதிகரித்து தரமான உணவு விளைவிப்பை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, கிடைக்கும் நீரை கொண்டு வேளாண்மையில் நீடித்த நிலையான வருவாய் பெற வேண்டிய அவசியமான நிலையில் உழவர்கள் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு துளி நீரையும் வீணாக்காது உணவு உற்பத்திக்குப் பயன்படுத்த உருவாக்கப்பட்ட திட்டமே நுண்ணீர் பாசனம் என்னும் சொட்டு நீர் பாசன திட்டம் ஆகும்.

75 முதல் 100 சதவீத மானியம்:

சொட்டு நீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. ஏற்கனவே சொட்டு நீர் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் கடந்திருந்தால், உபகரணங்கள் மாற்றிக்கொள்ள மீண்டும் மானியம் வழங்கப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன் பெற வேண்டும். ஆர்வமுள்ள விவசாயிகள் தேவையான ஆவணங்களான சிட்டா, அடங்கல், ரேஷன் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்புக் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களுடன் அந்தந்த வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ,ஆ,ப., தெரிவித்துள்ளார்.

ஆலங்காயம் வட்டாரம் – 9043493204, ஜோலார்பேட்டை மற்றும் நாட்றம்பள்ளி வட்டாரம் 9095880813, மாதனூர் வட்டாரம் 8825794936, கந்திலி வட்டாரம் -8838517900 மற்றும் திருப்பத்தூர் வட்டாரம்-7339165526.

மாறிவரும் காலநிலை மாற்றத்தினால் நீருக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசன முறைக்கு மாற வேண்டும் என வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

pic courtesy: YANmar tractor

மேலும் காண்க:

மாரடைப்புக்கும்- திங்கட்கிழமைக்கும் என்ன லிங்க்? உஷார் மக்களே

English Summary: good news for tirupathur farmers- subsidy details of drip irrigation Published on: 17 June 2023, 11:01 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.