ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள், விவசாயம் செய்ய நிலம் வாங்குதல், கிணறு வெட்டுதல் உள்ளிட்டவற்றுக்கு தமிழக அரசின் தாட்கோ ((TAHDCO)) திட்டம் மூலம் 50% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் (Economic Development Plan)
விவசாயத்தை திறம்பட செயல்படுத்த நிதி மிகவும் முக்கியமானது. அத்தகைய நிதித்தேவையை பூர்த்தி செய்ய ஏதுவாக தமிழக அரசு சார்பில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழ்நாடு ஆதி திராவிடர் ஹவுசிங் அன்ட் டெவலப்மென்ட் கார்பரேஷன் (TAHDCO) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு 50% மானியத்தில் கடனுதவி வழங்கப்படுகிறது.
தகுதி (Qualification)
தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 65 வயது வரை இருக்க வேண்டும்
குடும்ப வருமானம் (Family Income)
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.42 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
திட்டத்தொகை அதிகரிப்பு (Scheme Amount Increased)
இதேபோன்று பயனாளிகளின் தகுதிக்கு ஏற்பவும், தேர்வு செய்யப்படும் திட்டத்திற்கு ஏற்பவும், திட்ட தொகையை வங்கிகள் அதிகப்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ரூ.2.5 லட்சம் வரை மானியம் (Subsidy upto Rs.2.5lakh)
அதிகபட்சமாக தாட்கோ மானியம் வழங்குவதற்கு திட்டத்தொகையில் உச்சவரம்பு ரூ.7½ லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு, அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது.
எந்தப் பணிக்கு கடன்?
பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்தல், துரித மின்இணைப்பு பெறுதல், கிணறு அமைத்தல், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லரை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர், இளைஞர் சுயவேலை வாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்தகம், கண்ணாடியகம், போன்ற திட்டத்துடன், சுய உதவிக்குழு இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத்திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவியில் ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டம் ஆகியவை வழங்கப்பட உள்ளது.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents)
மேற்கண்ட அனைத்து திட்டங்களுக்கும் விண்ணப்பதாரர் முகவரி, ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் மற்றும் திட்ட அறிக்கை, பட்டா விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி ஆகிய ஆவணங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
விதிவிலக்கு (Exception)
தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர திட்டங்களுக்கு ஏற்றாற்போல தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தாட்கோவின், http://application.tahdco.com என்ற இணையளத முகவரியில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின்பு விண்ணப்பதாரர்களுக்கு ஒப்புகை ரசீது வழங்கப்படும்.
கட்டணம் (Fees)
-
இதற்காக விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளிகளிடம் இருந்து ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படும்.
-
விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்தோ, நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை.
மேலும் படிக்க...
ரபி பருவப் பயிர்களுக்குக் காப்பீடு செய்ய அழைப்பு!
தமிழகத்திற்கு 25 ஆயிரம் கால்நடைக் கொட்டகைகளைக் கட்டித்தருகிறது மத்திய அரசு!
MGNREGA திட்டத்தின் கீழ் கொட்டகை அமைக்க ரூ.1 லட்சம் மானியம் - விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments