நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகளின் வசதிக்கேற்ப வாடகைக்கு வழங்கப்படும் அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் தொடர்பான விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் சார்ந்த அலுவலர்கள், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் உள்ளிட்டோர்களுடன் கடந்த (17.02.2023) அன்று கலந்தலோசனை கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் வாடகை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தனியார் நெல் அறுவடை இயந்திரம், பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 2600/- மற்றும் டயர் டைப் இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1850/- என வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகை தொகைக்கு மிகாமல் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் வாடகை வசூலித்து இயந்திர பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரு நெல் அறுவடை இயந்திரம் வழங்கப்பட்டுள்து. அரசு நெல் அறுவடை இயந்திரம் பயன்படுத்த பெல்ட் டைப் இயந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1880- யும், டயர் டைப் இயந்திரத்திற்கு ரூ. 1160 –எனவும் அரசு நிர்ணயம் செய்துள்ளது.
விவசாயிகள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் அரசு நெல் அறுவடை இயந்திரம் மற்றும் 65 தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களின் விவரம் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நெல் அறுவடை இயந்திரம் தேவைப்படும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அதற்கான வாடகை தொகையினை செலுத்தி அரசு மற்றும் தனியார் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு கூடுதலாக வாடகை வசூலிப்பது குறித்து கீழ்கண்ட வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செயற்பொறியாளர், (வே.பொ.து), நந்தனம், சென்னை 35, தொலைபேசி எண் 044 - 24327238, 9952952253
- உதவி செயற்பொறியாளர், (வே.பொ.து), காஞ்சிபுரம், தொலைபேசி எண் 044 - 27230110, 9003090440
மேலும் படிக்க:
இடையினம்(INTERSEX) பாலின அடையாள அட்டை- பல அவமானங்களுக்கு பின் பெற்ற முதல் தமிழர்
பறவைக்காய்ச்சல் எதிரொலி- கோழி மற்றும் வாத்து இறைச்சிக்கு தடை
Share your comments