நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தகுதியான விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகளுக்கு பவர்டில்லர் / களை எடுக்கும் கருவிகள் மானியத்தில் (கிராம ஊராட்சிக்கு 2 அல்லது 3) வழங்க ஓதுக்கீடு பெறப்பட உள்ளது.
இந்த திட்டத்தில் சிறு, குறு, பெண் விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர பிரிவினருக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்பட உள்ளது. எஸ்.சி, எஸ்.டி பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இத்திட்டத்திற்கு ரூ.105.08 இலட்சம் ஓதுக்கீடு செய்யப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட 65 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெறுவதற்கு சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவன் செயலியில் (Online) மூலமாக பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் இத்திட்டம் தொடர்பான முழுவிவரங்களைப் பெற்றிட கீழ்க்காணும் வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களை அணுகுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மை விரிவாக்க மையம், சிவில் சப்ளைஸ் கிடங்கு பின்புறம், அண்ணாமலைநகர், வசந்தபுரம் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம், நாமக்கல்-600 002, போன் - 04286 290084
உதவி செயற்பொறியாளர்,வேளாண்மைப் பொறியியல் துறை, 2/607, RTO அலுவலகம் (அருகில்), ஆண்டிபாளையம் அஞ்சல், வரகூராம்பட்டி, திருச்செங்கோடு வட்டம், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு - 637 214. போன்-04286 290517.
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்:
நாமக்கல் மாவட்டத்தில் இன்று குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைப்பெறுகிறது.
இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு போன்றவற்றை பொதுமக்கள் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
இந்தியாவில் வேகமெடுக்கும் கருப்பு சிப்பாய் ஈ வளர்ப்பு- விவசாயிகள் ஆர்வம்
Share your comments