வெந்தயம் நம் சமையல் பொருட்களில் ஒன்றானது. நம்மில் பலர் வெந்தயத்தை அப்படியே உட்கொண்டிருப்பீர்கள், ஆனால் அதே போல் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டது உண்டா? அதில் இருந்து கிடைக்கும் பற்றி நன்மைகள் தெரியுமா?
முளைகட்டிய வெந்தயத்தின் சிறந்த நன்மைகள்
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகள் தினமும் வெறும் வயிற்றில் முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் வெந்தயத்தில் உள்ள மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
இதயம்
முளைகட்டிய வெந்தயம் உடலில் கெட்ட கொழுப்புகளை சேரவிடாமல் ரத்தத்தின் செயல்பாட்டை சீராக வைக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எளிதில் நேராது.
சருமம்
முளைகட்டிய வெந்தயம் சருமத்தில் உள்ள அணைத்து செல்களையும் தூண்டுவதால் அவை பாதிப்படையாமல் இருக்கின்றன. இதனால் பருக்கள், கருமை, முக சோர்வு, கரும்புள்ளிகள் அனைத்திற்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
உடற் சூடு
வெந்தயம் இயற்கையாகவே குளிர்ச்சி தன்மை கொண்டது. இந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து வயிற்று வலி, சூட்டால் ஏற்படும் பருக்கள், முடி உதிர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.
உடல் எடை
உடல் எடை, தொப்பை, அதிகம் இருப்பவர்கள் தினமும் இந்த முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறைவதை உணர்வீர்கள்.
பிரசவம்
வெந்தயத்தில் இருக்கும் யுட்ரைன் பிரசவ நேரத்தில் வழியை குறைக்கிறது, மற்றும் பிரசவத்தை எளிதாக்கிறது. ஆனால் அளவுக்கு மீறி சாப்பிட்டால் பின் விளைவுகளை நேரிடவிருக்கும். அதனால் மருத்துவரின் ஆலோசனை படி உட்கொள்ளவும்.
https://tamil.krishijagran.com/health-lifestyle/uses-of-fenugreek/
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments