ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க, முழுமையான நல்வாழ்வுக்காக சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அந்த வகையில் உதவும் எட்டு கருத்துக்கள் பின்வருமாறு:
ஆரோக்கியமான உணவை உண்ணுதல்
ஆரோக்கியமான சமச்சீரான உணவை உண்பது சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். திட்டவட்டமான அட்டவணை இல்லாமல் வீட்டிலிருந்து வேலை செய்தாலும், உணவு நேரத்தையும், உணவைத் தவிர்க்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது. இது நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும். கொழுப்புச் சார்ந்த உணவு மற்றும் உப்பு உட்கொள்ளுதலைக் குறைக்க வேண்டும். உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்தல் வேண்டும்
ஏரோபிக்ஸ், ஜூம்பா முதலான பயிற்சிகள் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்கச் சிறந்த வழியாகும். உட்கார்ந்த நிலையில் வேலை செய்யும் வாழ்க்கை முறையின் விளைவாக கொழுப்பு சேர்ந்து தொப்பை விழ ஆரம்பிக்கிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடற்பயிற்சி மிக அவசியம்.
உடலில் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்
உடலில் நீர்ச்சத்து குறைவு பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. ஆனால் நீரின் அளவு என்பது உடலின் செயல்பாட்டை உறுதி செய்வதோடு மிருதுவான சருமத்தையும் தருகிறது. நீரின் அளவு குறையாமல் இருக்க தண்ணீர் குடிப்பது சிறந்த வழியாகும், இது இரத்தத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்க்கவும்
குடிப்பழக்கம், புகைபிடித்தல் அல்லது போதைப்பொருள் ஆகியவை பெரும்பாலும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, இவற்றில் ஏதேனும் இருந்தால், படிப்படியாக அவற்றைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். இது சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். அதோடு நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தவிர்க்கும்.
தியானம்
நாள்பட்ட நோய்களுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக இருக்கின்றது. மன அழுத்தம் உடலின் இரத்த சர்க்கரை அளவுகள், உணவு தேர்வுகள், உடல் எடை, நோய் பாதிப்பு போன்றவற்றை பாதிக்கிறது. மன நலத்திற்கு, தொடர்ந்து தியானம் செய்வது நல்லது. தியானத்திற்காக ஒரு நாளில் சில நிமிடங்களை ஒதுக்குவது மன ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும்.
நிறைவான தூக்கம் பெறுதல்
தூக்கத்தின் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் வலியுறுத்த முடியாது அனைவரும் குறைவான நேரங்களில் தூங்குகிறோம். அல்லது தூக்க சுழற்சியை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கின்றோம். சீரற்ற தூக்க முறைகள் பசியைச் சீர்குலைக்கும், உடல் செயல்திறனைக் குறைக்கும் மற்றும் மன சோர்வைக் கொடுக்கும். உடல் சீராக அமைய தினமும் 8 மணி நேரம் தூங்குதல் வேண்டும்.
மேலும் படிக்க...
வெந்தயம்: சரும பிரச்சனைகளுக்கான தீர்வு! ஆச்சரியம் தரும் வீட்டுக்குறிப்புகள்!
Share your comments