நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். மனித சமுதாயம் நித்தம் நித்தம் விதவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில், லட்ச லட்சமாகப் பணம் இருந்தாலும் நாம் செல்வமற்றவர்கள்தான். நோய்த் தாக்குதல் என்பது இன்று பரவலாகக் காணப்படுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களாலும், சுகாதார சீர்கேட்டாலும், உணவுப் பழக்கத்தாலும், மனப் பிரச்னைகளாலும் என, பல்வேறு காரணங்களால் உடலில் நோய்கள் உருவாகின்றன.
இந்த நோய்களை எதிர்கொண்டு வாழ மனிதனுக்கு ஆறுதலாக, ஆதரவாக உள்ளது மூலிகை மருத்துவம். இன்று மிகவும் பிரசித்தி பெற்றதாக, அறுவை சிகிச்சையில் முன்னேறியதாக ஆங்கில மருத்துவம் இருந்தபோதும், இதற்கெல்லாம் ஆரம்பமாகவும், முன்னோடியாகவும் அமைந்தது நம் நாட்டின் ஆயுர்வேதம் எனலாம். கீழே குறிப்பிட்டுள்ள சில மூலிகைச் செடிகளின் தன்மைகளும் அதன் மருத்துவ குணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
நீர் பிரம்மி
நீர் பிரம்மி நரம்பு கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக உபயோகிக்கப்படுகிறது. வலிப்பு, மனநோய், இவைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக மற்றும் மூட்டு வலிகளுக்கு, ஆஸ்துமா பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது. இதனுடன் நீர் பிரம்மி இருமல், காய்ச்சல் மற்றும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் பாரம்பரிய குணம் ஞாபக சக்தியை அதிகப்படுத்துவது.சித்த மருத்துவத்தில் இவை, மூட்டு வலி, இணைப்புகளில் வீக்கம், மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாக பயன் படுத்தப்படுகிறது. இவை குரல்வளை அழற்சி, நெஞ்சு எரிச்சல்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
மணத்தக்காளி
மணத்தக்காளியானது வாத நோய், வீக்கம், இருமல், ஆஸ்துமா, மார்ப்புச்சளி, காயம், அல்சர், வயிற்று மந்தம், ஈரல் வீக்கம், காதுவலி, கண், வாந்தி, இதய நோய், தொழு நோய், தோல் நோய்கள், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம், நச்சு தடை மருந்து, ஒவ்வாமை, இதய மருந்து, புண்ணாற்றுமை, செரிமானம், குடலிளக்கி, புத்துணர்ச்சி, மனதை அமைதிப்படுத்துதல் ஆகிய நோய்களுக்கு மருந்தாகவும் மற்றும் சத்து மருந்தாகவும் முழுத் தாவரம் பயன்படுகிறது.
துளசி
காய்ச்சல், தொண்டை புண், தலை வலி, இதய நோய், மனஅழுத்தம், கண் பிரச்சனை, வயிற்று பிரச்சனை, சளி இரும்பல், நீரிழிவு, சிறுநீரக கல் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் துளசி சிறந்த மருந்தாக அமைகிறது.
வில்வம்
மஞ்சள் காமாலை, காய்ச்சல், சீதபேதி, அனீமியா, மற்றும் காலரா ஆகியவற்றிற்கு தடுப்பு மருந்தாக பயன்படுகிறது.
கொத்தமல்லி
பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும். இரத்தத்தில் கலந்துள்ள சர்கரையை குறைக்கவும், இரத்த அழுத்தம், கல்லடைப்பு, வலிப்பு, ஆகியவை குணமாகும். மன வலிமை மேம்படும் . மன அமைதிக்கும், தூக்கமின்மைக்கு தீர்வு கிடைக்கும். வாய் நாற்றம், பல்வலி, ஈறு வீக்கம் குறையும்.
கற்பூர வல்லி
மிகச் சிறந்த இருமல் மருந்து. மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் குணமாகும்.
கறிவேப்பில்லை
சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது. பித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.
வல்லாரை
மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது.
தூது வேளை
நரம்பு தளர்ச்சி, மார்புச்சளி, தோல்நோயிகள், முழுமையாக குணமாகும். குழந்தைகளுக்கு நல்ல மூளை வளர்ச்சி, ஞாபகத் திறன் வளர சிறந்து விளங்குகிறது. காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் சிறந்தது.
அருகம்புல்
எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும். அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதிரி செய்தால் எல்லா நோய்களும் குணமடையும்.
உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான். தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.
கல்யாண முருங்கை (முள் முருங்கை)
அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பிணியும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீரழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.
மேலும் படிக்க...
குறைந்த முதலீடு நிறைவான வருமானம் தரும் ''காளான் வளர்ப்பு''!
சிறுதானியங்களை சீவல்-ஆக மாற்றி விற்பனையில் அசத்தும் ஈரோடு ராஜமணிக்கம்!
வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!
விவசாயிகளுக்கு உதவும் மத்திய-மாநில அரசுகளின் நல திட்டங்கள்
முறையான பயிர்வாரி சாகுபடி முறைகள் & தொழிநுட்பங்கள் - பகுதி-1!
Share your comments