உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதை ஆங்கிலத்தில் டீடாக்ஸ் என்கிறார்கள். டீடாக்ஸ் என்பது பல முறைகளில் செய்யப்படுகிறது. அதில் புதிதாக இணையத்தில் மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்து வருவது டீடாக்ஸ் ஃபுட் பேட்ஸ். இது நல்லது தானா என்று தெரிந்து கொள்ளும் முன் ஃபுட் பேட் என்பது என்னவென்பதைப் பார்ப்போம்.
ஃபுட் பேட்ஸ்
டீடாக்ஸ் ஃபுட் பேட்ஸ் (Food Pads) என்பது வெள்ளை நிறத்தில் பட்டையாக இருக்கும். இதனை இரவு முழுவதும் நம் பாதத்தில் ஒட்டி வைக்க வேண்டும். இரவு முழுவதும் நம் பாதத்தில் இருக்கும் அந்த பேட் காலையில் நிறம் மாறி கருப்பாக இருக்கும். நம் உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறி அந்த பேடில் தங்கி விடும். நம் உடலில் எந்த அளவு நச்சு இருக்கிறதோ அந்த அளவு அந்த பேடின் நிறம் மாறும்.
தொடர்ந்து இந்த ஃபுட் பேடை பயன்படுத்தி வரும்போது குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு காலையில் பார்க்கும்போது அந்த பேட் சுத்தமாக இருக்கும். அதாவது நம் உடலின் நச்சுகள் சுத்தமாகி விட்டது என்று பொருள் என்கிறார்கள். 10 நாட்கள் செய்து முடித்தால் ஒரு டீடாக்ஸிபேஷன் தெரபி முழுமையடையும்.
Also Read | தலைமுடி உதிர்வுக்கு காரணம் தான் எனன? தீர்வை அறிவோம்
நல்லதா? கெட்டதா?
தேவையைப் பொறுத்து 2,3 டீடாக்ஸ்பேஷன் தெரபியை பயன்படுத்தலாம்.
கால்களில் டீடாக்ஸி பேஷன் தெரபியை முடித்த பின்னர் இதனை கைமூட்டு, கால் மூட்டு, முதுகுப் பக்கமும் பயன்படுத்தலாம். டீடாக்ஸ் செய்வதற்கான சிறந்த வழி ஃபுட் பேட்ஸ் என்பதற்கு அறிவியல் பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. ஃபுட் பேடை பயன்படுத்துவதால் இத்தகைய நன்மைகள் அல்லது தீமைகள் ஏற்படும் என்பதற்கான ஆய்வறிக்கைகளும் இல்லை.
அதனால் டீடாக்ஸ் ஃபுட் பேட் பயன்படுத்தும் முன்பு உங்களுடைய குடும்ப நல மருத்துவர் அல்லது சரும நல மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். பாதங்களை சுத்தம் செய்ய விரும்பினால் ஃபுட் பேட்ஸுக்கு பதிலாக வெந்நீரில் கல் உப்பு, மஞ்சள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம். இதுவும் டீடாக்ஸ் இல்லை. பாதங்களை தூய்மையாக வைத்திருக்க மட்டுமே.
மேலும் படிக்க
Share your comments