1. வாழ்வும் நலமும்

க்ரீன் டீ யாருக்கெல்லாம் நல்லது!

R. Balakrishnan
R. Balakrishnan

Green Tea

உடல் எடை குறைய, உடலை மெருகேற்ற, சருமம் பளபளக்க என பல காரணங்களை சொல்லி க்ரீன் டீ (Green Tea) குடிப்பது இன்று வாடிக்கையாகி விட்டது. அப்படி க்ரீன் டீ குடிப்பதால் உண்மையாகவே உடல் எடை குறைகிறதா, உடல் மெருகேறுகிறதா அல்லது அழகு கூடி விடுகிறதா என்றால் யாரிடமும் சரியான பதில் இல்லை. ஏனென்றால் தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு அல்லது தவறான வழிகாட்டுதலின் பேரிலே க்ரீன் டீ அருந்துபவர்கள் தான் அதிகம். அதன் பயன் அறிந்து க்ரீன் டீ அருந்துபவர்கள் மிக குறைவு. நிஜத்தில் க்ரீன் டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

க்ரீன் டீ

உடலில் உள்ள நச்சுத்தன்மைகளை போக்கக் கூடியது க்ரீன் டீ. முக்கியமாக இது தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற இது மிகவும் உதவுகிறது. க்ரீன் டீ அருந்தும்போது கெட்ட கொழுப்புகள் கரைய ஆரம்பிக்கும். இதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

யாருக்கு நல்லது?

உடல் பருமன் மிக அதிகமாக உள்ளவர்கள் அல்லது தனது சரியான உடல் எடையில் அளவிலிருந்து 20 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் க்ரீன் டீயைத் தொடர்ந்து அருந்தலாம். இதனால் உடலில் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய மிகவும் உதவுகிறது. க்ரீன் டீ அருந்துவதால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.

யாரெல்லாம் அருந்தக் கூடாது?

உடல் எடை குறையவும், கெட்ட கொழுப்புகளை குறைக்கவும் இது எந்த அளவிற்கு பயனுள்ளதோ அதே அளவிற்கு சரியான உடல் எடை உள்ளவர்கள் இதை அருந்துவது மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். சரியான எடை கொண்டவர்கள் அல்லது தனது உடல் எடையின் பி.எம்.ஐ (BMI) அளவிலிருந்து 20 கிலோவுக்கு மேல் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே க்ரீன் டீ அருந்தலாம்.

Also Read | இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்த மூலிகைகளின் சிகரம் வில்வம்!

கூடுதலாக 10 கிலோ எடை அதிகமாக இருக்கிறது என்று கூட க்ரீன் டீயை அருந்தக் கூடாது. உடல் மெலிந்தவர்கள் அல்லது சரியான உடல் எடையில் உள்ளவர்கள் க்ரீன் டீயை தொடர்ந்து அருந்தும்போது உடலில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்களை மொத்தமாக வெளியேற்றிவிடும். உடலில் கால்சியம் போன்ற சத்துகள் உறிஞ்சப்பட்டு எலும்புகளில் தேய்மானம் ஏற்படும்.

ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவு குறையத் தொடங்கும். எனவே அதிக உடல் பருமன் உள்ளவர்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும் என்ற வரைமுறை உண்டு.

அதேபோல் நீரிழிவுடன் அதிக உடல் பருமன் உள்ளவர்கள் உட்பட அனைவருமே மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே க்ரீன் டீ எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு ஆஸ்டியோபோராசிஸ் என்கிற எலும்பு பலவீனத்தை உண்டாக்குவதில் க்ரீன் டீ க்கு முக்கிய பங்கு இருக்கிறது. எனவே, க்ரீன் டீயை ஒரு நவநாகரிக விஷயமாக நினைத்து எல்லோரும் பருகக் கூடாது.

க்ரீன் டீ எடுத்துக் கொள்ளும் முறை

அதிகளவு உடல் பருமன் உள்ளவர்கள் ஒவ்வொரு வேளை உணவிற்குப் பிறகும் க்ரீன் டீயை எடுத்துக் கொள்ளலாம். காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவிற்குப் பிறகும் சூடான க்ரீன் டீ எடுத்துக் கொள்ளலாம். இது நாம் உண்ட உணவின் மூலம் சேர்ந்த தேவையற்ற கொழுப்புகளை உடனே கரைக்கும் தன்மையுடையது.

மேலும் படிக்க

தலைமுடி உதிர்வுக்கு காரணம் தான் எனன? தீர்வை அறிவோம்

கொரோனா வைரஸ் தொற்றால் நினைவாற்றல் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

English Summary: Green tea is good for everyone?

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.