புரதச்சத்து மற்றும் கனிமச்சத்துக்களுடன் வைட்டமின்கள் அடங்கிய காயாக அவரைக்காய் இருக்கிறது. வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கக் கூடிய காய்வகையாக அவரைக்காய் இருக்கிறது. இத்தகைய அவரைக்காய் அரிய பல மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
அவரைக்காயினைப் பரவலாக உணவில் பொரியல், கூட்டு, சாம்பார் எனப் பல விதங்களில் சுவை சேர்க்கிறது. அதன் மருத்துவ குணங்கள் பல இருக்கின்றன. அதனைக் குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். அவரைக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் சத்து, நார்ச்சத்து, சர்க்கரை சத்து, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் என்று ஏராளமான சத்துக்கள் உள்ளன.
அவரைக்காயின் பயன்கள்
- பத்திய உணவு உண்பவர்களும் அவரைக்காயினை உணவில் எடுத்துக்கொள்ளலாம் என்றும், எத்தகைய பக்க விளைவும் ஏற்படாதும் என்றும் கூறப்படுகிறது.
- உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டி, நீரிழிவு நோயினைக் கட்டுப்படுத்துகின்றது.
- இதில் கால்சியம் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகளின் எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்த இது உதவுகிறது.
- அவரையில் உள்ள பாஸ்பரஸ், எலும்பு சம்பந்தமான நோய்களைத் தீர்க்கிறது.
- இதில் இருக்கும் பொட்டாசியம் சத்து, இதய பிரச்சினைகளை தீர்க்க உறுதுணையாக இருக்கிறது.
- வைட்டமின் சி, ரத்த ஓட்டத்தினைச் சீராக்குகிறது.
- அவரைக்காய் ரத்தக் கொதிப்பினைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
- இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை தீர்க்கிறது.
- அவரைக்காய் உணவு ஜீரணமாக உதவுவதுடன், நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளையும் தடுக்க உதவுகிறது.
- பசியின்மையினைப் போக்கி நல்லதொரு பசி தூண்டியாக இருக்கிறது.
- உடல் பருமன் உடையவர்கள் இதைச் சாப்பிட்டால் எடை குறையும்.
- வயிற்றுப் புண்களை ஆற்ற உதவுகிறது.
- சர்க்கரை நோயால் வரும் மயக்கம், கை, கால் மரத்து போதல் முதலான சத்து குறைபாட்டால் வருவனவற்றைச் சரி செய்கிறது.
முற்றிய அவரைக்காயினை உணவாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக முற்றிய அவரைக்காய், முற்றிய வெண்டைக்காய் முதலானவற்றைச் சேர்த்து சூப் செய்து அருந்தினால் உடல் பலமடையும் எனக் கூறப்படுகின்றது. எனவே, அவரைக்காயினை உணவில் சேர்த்துப் வளமான வாழ்வினைப் பெறுங்கள்.
மேலும் படிக்க
கல்லீரலில் கொழுப்பு பிரச்சனையா? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்கோங்க!
Share your comments