துாசு, மாசு என்று கணக்கில் அடங்காத அசுத்தங்களை, தினசரி நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதோடு, அன்றாட அலுவல்களில் ஏற்படும் மன அழுத்தம் (Stress) வேறு. இதில், சிலவற்றை நாம் கட்டுப்படுத்தலாம்; சிலவற்றை கட்டுப்படுத்த இயலாது. வெளிக் காரணிகள் அல்லது மன அழுத்தம் என எதுவானாலும், அவற்றின் இலக்கு நம் எதிர்ப்பு சக்தியை குறைப்பது தான். கட்டுப்படுத்த முடியாத விஷயங்களால், நம் எதிர்ப்பு சக்தி (Immunity) பாதிப்படையும் போது, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சொல்லும் தீர்வுகளில் ஒன்று தான், அத்தியாவசிய வாசனை எண்ணெய்களை பயன்படுத்துவது.
லாவண்டர் எண்ணெய்
குளிக்கும் போது, நீரில் சில சொட்டுகள் விட்டு குளிக்கலாம். துாங்கும் நேரத்தில், படுக்கையில் சில துளிகள் தெளித்துக் கொள்ளலாம்; ஆழ்ந்த துாக்கம் வரும். இதன் வாசனையை நுகர்ந்தாலே கூட போதும்; மன அழுத்தம் குறைந்து, அமைதியான மனநிலை வரும்.
யுகலிப்டஸ் எண்ணெய்
சுவாசப் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும். கொதிக்கும் நீரில் சில துளிகள் போட்டு ஆவி பிடித்தால், மூளை, நுரையீரலுக்கு சென்று, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
பெப்பர்மின்ட் எண்ணெய்
நல்ல வாசனையுடன் இருக்கும் எண்ணெய் இது. குழந்தைகளை பாதிக்கும் கொக்கி புழு தொற்றால், சரும நோய்கள், தலைவலி, செரிமான கோளாறு ஏற்படும், இதை உடலில் தேய்த்து குளிக்கும் போது, தொற்றுகள் நீங்கும். சளி, இருமல், காய்ச்சல் அதிகம் பரவும் காலங்களில், இது மிகுந்த பலனைத் தரும்.
லெமன் கிராஸ் எண்ணெய்
பல அறிவியல் ஆய்வுகளில், கல்லீரலை (Liver) பாதுகாக்க உதவுகிறது என்று சொல்லப்படுகிறது. நேரடியாக தோலில் இதை உபயோகிப்பதை தவிர்த்து, ஆவி பிடிக்கலாம். சளித் தொல்லை இருந்தால், 50 மில்லி நல்லெண்ணெயில், இரண்டு சொட்டு விட்டு கலந்து, முதுகு, விலா எலும்புகளுக்கு இடையில் தேய்த்தால், சளியை வெளியேற்ற உதவும்.
ரோஸ் மேரி
சுவாசப் பாதையில் கிருமிகள், துாசு (Dust) என்று எது இருந்தாலும், அதை வெளியேற்றும் தன்மை இதில் உண்டு. குழந்தைகளுக்கு இதை பயன்படுத்தும் போது, மருத்துவரின் கண்காணிப்பில் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தகவலுக்கு
டாக்டர் யோ. தீபா,
தலைவர், கைநுட்பப் பிரிவு,
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை
சென்னை
044 - 2622 2516
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மாடித் தோட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ! பிரபல பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அசத்தல்!
செவ்வாழையின் அற்புதப் பலன்களை எடுத்துரைக்கும் சித்த மருத்துவர்!
Share your comments