1. வாழ்வும் நலமும்

மழை காலங்களில் தயிர் சாப்பிடலாமா? நிபுணர்களின் கூற்று!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Curd

பொதுவாக, நாம் மழை காலங்களிலும் குளிர் காலங்களிலும் தயிர்  சாப்பிடுவதைத் தவிர்த்து விடுகிறோம். அதனால், சளி இருமல் வரும் என்ற சிந்தனை பலருக்கு இருக்கிறது. ஆனால், இது முற்றிலும் தவறான எண்ணம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தயிர் எல்லா காலநிலைகளுக்கும் ஏற்ற உணவு. அதில், 'புரோ - பயாடிக்' என்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. இதனால், வயிறு சம்பந்தமான நோய்கள் குணமடைவது மட்டுல்லாமல், இந்த கொரோனா தொற்று பரவி வரும் காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் மேம்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தயிர் சிறந்த புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும், நம் உடல் அரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பல நுண்ணுயிரிகளும் உள்ளன. புரோபயாடிக் உணவுகள், தொற்று நோயை எதிர்த்து போராடும்,இதுமட்டுமல்லாமல் ரத்தத்தின் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும். இதனால் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதனால், சாதாரண சளி, இருமல் மட்டுமல்ல, கொரோனாவிலிருந்தும் விடுபடமுடியும்.

நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமல்ல, தயிர் சருமத்திற்கும் தலைமுடிக்கும் மருந்து பொருளை போல் உபயோகிக்கலாம். ஆரோக்கியமான முடியைப் பெற இது ஒரு சிறந்த வீட்டு வைத்தியம். மேலும், தயிர், எலுமிச்சை மற்றும் கடலை மாவு கலவையை முகத்தில் தடவி, 15 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். தயிர் ப்ளீச்சாகவும் செயல்படுகிறது. குளிர் காலத்தில் சருமமும், முடியும் வறண்டு போகாமல் இருக்க பயனளிக்கும்.

அதோடு உடல் எடையை குறைக்கவும் உதவியாக உள்ளது. கார்டிசோல் எனப்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் தவறான வழக்கங்கள் முறை காரணமாக இடுப்பைச் சுற்றி சேரும் அதிக கொழுப்பை சீராக்குகிறது.இது கார்டிசோல் உற்பத்தியை குறைப்பதால், உடல் எடையும்  குறைகிறது. தயிர் உட்கொள்வது நீண்ட நேரம் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். கலோரிகளின் அளவைக் குறைப்பதன் மூலம் வயிற்றை குறைக்கவும் இது பயனுள்ளதாக இருக்கிறது.

மேலும், தினமும் தயிர் சாப்பிடுவது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும், இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. இதனால், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவியாக இருக்கிறது.

சோர்வாக இருக்கும்போது, தயிர் சாப்பிடுவது உடனடி பலன் அளிக்கும். வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த தயிர் ஒரு ஆற்றல் ஊக்கியாகும். இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது, கடின உழைப்பிற்கு பிறகு ஏற்படும் சோர்வை விரைவில் மீட்க பயனாக உள்ளது.

இத்தனை பலன்கள் நிறைந்த தயிரை தினம்தோறும் உணவில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக இருக்கலாம்.

மேலும் படிக்க:

கொத்தவரங்காய் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய நன்மைகள் வழங்குகின்றன.

நீங்கள் தண்ணீரை அதிகளவில் பருகுவீர்களா? எச்சரிக்கை

English Summary: Can yogurt be eaten during the rainy season? Experts claim! Published on: 30 July 2021, 05:56 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.