நம் வீட்டில் அன்றாட உணவு நம் உண்டபின் மிஞ்சுவது இயல்பாக நடக்கும் விஷயம் ஆகும். கருத்தான நம் வீட்டு இல்லத்தரசிகள் மிஞ்சிய உணவை வீணடிக்காமல் வேறு ஏதாவது செய்து தங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் உணவளிப்பார்கள்.
உதாரணமாக நம் தாய்மார்கள் அனைவரும் இரவில் மிஞ்சிய இட்லியை காலையில் தாளித்து "தாளித்த இட்லி" என்று ஒரு புதிய உணவை செய்து நமக்கு கொடுப்பது வழக்கம்.
அதுபோல சப்பாத்தி மிஞ்சினாலும் புதியதாக ஒரு ரெசிபியை செய்யலாம். அதுதான் "சப்பாத்தி நூடுல்ஸ் ". என்றாவது சப்பாத்தி மிஞ்சிவிட்டால் கவலைகொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை. இந்து சூடான சுவையான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் "சப்பாத்தி நூடுல்ஸ் " எப்படி செய்வது என்று விரிவாக காண்போம்
தேவையான பொருட்கள்
- சப்பாத்தி - 6 ( சுருட்டிக்கொண்டு மெல்லிய கோடுகளாக நறுக்கிக்கொள்ளவும்)
- வெங்காயம் - 1 (நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்)
- பச்சை மிளகாய் - 1
- கேரட் - 1
- பூண்டு - 3 பல்[நறுக்கியது]
- குடைமிளகாய் - 1/2 கப் [மெல்லிய கோடுகளாக வெட்டவும்]
- பச்சை மிளகாய் - 1 [நறுக்கியது]
- தக்காளி சில்லி சாஸ் - 2 டீஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- உப்பு
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை
சப்பாத்தியை சுருட்டிக்கொண்டு மெல்லிய கோடுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
தக்காளி சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
சுருட்டிக்கொண்டு மெல்லிய கோடுகளாக நறுக்கிய சப்பாத்தி நூடுல்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.
தேவைப்பட்டால் 2 டீஸ்பூன் தக்காளி சில்லி சாஸ் சேர்க்கவும்.
அது தயாரானதும், நெருப்பை அணைத்து சூடாக பரிமாறவும்.
சூடான சுவையான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் "சப்பாத்தி நூடுல்ஸ் " தயார்.
இதை தக்காளி சாஸ் சேர்த்து உண்டு ருசிக்கலாம்.
மைதா நூடுல்ஸ் உண்ண விரும்பாதவர்கள் மற்றும் மைதா பொருட்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதாக நினைப்பவர்களுக்கு இது நிச்சயம் ஒரு அருமையான மாற்று வழி.
மேலும் படிக்க
Share your comments