தேங்காய் சாப்பிடுவதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி 5 மருத்துவ குறிப்புகள், இந்த பதிவில் காணலாம். வெளிநாடுகள் தொடங்கி வெளி மாநிலங்கள் வரை தென் மாநிலங்களை குறிப்பிடும் அனைவரும், வாழைப் பழம், தேங்காய் விளைச்சல் அதிகம் காணப்படும் மாநிலங்கள் என குறிப்பிடுவது வழக்கம்.
அவ்வாறு நம் உணவு பழக்கத்திலும் அதிகமாக காணப்படும் தேங்காய் குணங்கள் தெரிந்துக்கொள்ளலாம். தேங்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கிறது, என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தென் மாநிலங்களில், தேங்காய் சுலபமாக கிடைக்கும் அற்புதமான உணவு பொருளாகும். தினமும் தேங்காய் நம்முடைய உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும் என அறிவியல் அறிக்கை.
எப்படி சாப்பிட்டாலும் ஆரோக்கியமான இந்த காய், கனியின் அற்புத பலன்களையும் கொடுக்கும். அதிலும் பச்சை தேங்காய் அதாவது இளநீர், காய்ந்த தேங்காயில் இருக்கும் நீர் ஆரோக்கியம் எண்ணில் அடங்காததாகும். தேங்காய் சாப்பிடுவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்றாலும், குறிப்பாக பெண்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம்.
தேங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள் (5 Benefits of Eating Coconut)
1. தைராய்டு, எடை இழப்பு, இதய நோய் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது என பலா் அறியாததாகும்
2. தேங்காய் உட்கொண்டால், இதய நோய்களைத் தவிர்த்திடலாம். மேலும், கர்ப்ப காலத்தில் இதை உட்கொண்டால் அதிக நன்மை கிடைக்கும். உலர் தேங்காய் பெண்களில் யுடிஐ பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.
3. தைராய்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த உணவாக விளங்கும் தேங்காய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தைராய்டு அதிகமாக இருந்தாலும் சரி, குறைவாக இருந்தாலும் சரி, அதை சரிப்படுத்துகிறது.
4. தேங்காயில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் உடலுக்கு தேவையானதாகும். சாப்பிடுவதற்கு சுவையான இந்த காய், மனச்சோர்வையும் விரட்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
5. தேங்காயை பச்சையாக சட்னி செய்து சாப்பிட்டாலும் சரி, அரைத்து குழம்பு வைத்து சாப்பிட்டாலும் சரி, அது தனது நன்மை தரும் பண்பை மாற்றுவதில்லை.
மேலும் படிக்க:
7th Pay Commission குட் நியூஸ்: 34% டி ஏ பற்றிய முக்கிய அப்டேட் அறிந்திடுங்கள்
தமிழகம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு: வெற்றி கண்டது யார்யார்?
Share your comments