காலம் காலமாக நாம் விரும்பி உண்ணும் மாலை நேர நொறு
க்குத் தீனியில் இடம்பிடிப்பது என்றால், வேர்க்கடலை என்பதுதான் பலரது விருப்பமாக இருக்கும். அதிலும் நன்குப் பதமாக வறுத்த வேர்க்கடலை சாப்பிடும்போது கிடைக்கும் உற்சாகமும், ஆனந்தமும் சொல்லவே முடியாது. அனுபவிக்க மட்டுமே முடியும். அதனால்தான், வேர்க்கடலை அனைவருக்கும் பிடிக்கும். இதை சாப்பிடுவதால் நன்மைகளும் ஏராளம். இதில் உள்ள புரதம், இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் மூலம் உடல் வலிமை பெறுகிறது.
ஆனால் வேர்க்கடலையில் பக்கவிளைவுகளும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?இதை அதிகப்படியாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு என்னென்னத் தீங்குகளை விளைவிக்கும். இதோ அந்தப் பட்டியல் உங்களுக்காக.
ஊட்டச்சத்துக் குறைபாடு
ஃபைடேட் வடிவில் சேமிக்கப்படும் நிலக்கடலையில் பாஸ்பரஸ் நல்ல அளவில் உள்ளது. ஒரே நேரத்தில் அதிக பைடேட்டை உட்கொள்வது இரும்பு, துத்தநாகம், கால்சியம் மற்றும் மாங்கனீசு போன்ற பிற தாதுக்களை உறிஞ்சுவதை கடினமாக்குகிறது. அதுமட்டுமின்றி, நாளடைவில் இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் வழிவகுக்கும்.
ஒவ்வாமை
வேர்க்கடலையில் ஒவ்வாமையின் பக்க விளைவும் உள்ளது. இந்த பிரச்சனை குழந்தைகளுக்கு பொதுவானது. வேர்க்கடலை மூக்கு ஒழுகுதல், தொண்டை மற்றும் தோல் பிரச்சினைகள், செரிமான பிரச்சினைகள் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
உடல் எடை கூடும்
வேர்க்கடலையில் அதிக கலோரிகள் உள்ளன. இதனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் எடை கூடும் அபாயமும் உள்ளது. டயட் செய்பவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை போதுமானது. ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் 170 கலோரிகள் உள்ளன.
வயிற்று உபாதைகள்
வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று உபாதைகள் ஏற்படும். இதனை ஆசையாக அதிகளவு சாப்பிடும்போது, , மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றப் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஏற்கனவே வயிற்றில் பிரச்சனை உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின் படியே வேர்க்கடலையை எடுத்துக்கொள்வது நல்லது.
வேர்க்கடலையில் புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆரோக்கியமான கொழுப்பிற்கு இது ஒரு நல்ல ஆதாரமாக கூறப்படுகிறது. உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இதனை எவ்வளவு எடுத்துக்கொள்கிறோம் என்பதை மனதில் வைத்துக்கொள்வது மிக மிக அவசியம். ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி வேர்க்கடலை எடுத்துக்கொண்டால் போதும். அதேபோல் வேர்க்கடலையை மாலையில் மட்டும் சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க...
Share your comments