1. வாழ்வும் நலமும்

வெங்காயத் தோலின் நன்மைகள் தெரிந்தால் தூக்கி எறியமாட்டீங்க!

Dinesh Kumar
Dinesh Kumar
Benefits in the Onion Peels..

வெங்காயம் நமது பெரும்பாலான பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், வெங்காயத்தைப் பற்றி பலரும் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அவை குறித்து இப்பகுதியில் பார்ப்போம்.

பெரும்பாலான மக்கள் வெங்காயத் தோலைப் பயனற்றது என்று எண்ணி தூக்கி எறிந்து விடுகிறார்கள். இருப்பினும் வெங்காயத்தின் தோல் பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.

வைட்டமின் ஏ நிறைந்த வெங்காய தேநீர் கண்களுக்கு நல்லது. இது சருமத்தின் தன்மையையும் மென்மையையும் மேம்படுத்துகிறது. தண்ணீர் காய்ந்ததும் வெங்காயத்தோல், சர்க்கரை, டீத்தூள் சேர்த்துக் குடிக்கலாம்.

இது சற்று வித்தியாசமான சுவை, ஆனால் இது உங்கள் கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வெங்காயத் தோலின் மற்ற நன்மைகள்:

  • வெங்காயத் தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பல்வேறு தொற்று நோய்களைத் தடுக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக குடிக்கவும். இவ்வாறு செய்தால் இதய பிரச்சனை நீக்கி உங்கள் ஆரோகியத்திற்கு உதவுகிறது.
  • வெங்காயத் தோலில் வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ளது. இது உங்கள் சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
  • வெங்காய தேநீர், ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது, இது நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது சருமத்திற்கும் மிகவும் நன்மை அளிக்கிறது. இதற்கு வெங்காயத் தோலை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்கலாம். இதை தினமும் எடுத்துக் கொள்வது நல்லது.
  • இது தவிர, தலைமுடியைக் கழுவுவதற்கு முன் வெங்காயத் தோலை தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரில் ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி வந்தால் முடி உதிர்வு பிரச்சனைகளை முற்றிலும் தடுக்கலாம்.
  • வெங்காயத் தோலை தண்ணீரில் கொதிக்கவைத்துக் கொப்பளித்தாலோ அல்லது தேநீரில் கொதிக்க வைத்து குடித்தாலோ, தொண்டை புண் மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
  • வெங்காயத் தோலில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடுதலாக, இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், குர்குமின் மற்றும் பினாலிக் ஆகியவை வீக்கம் மற்றும் புற்றுநோயைத் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    (துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது.)

மேலும் படிக்க:

வெங்காயத் தோலிலிருந்து கரிம உரம்! தயாரிப்பது எப்படி?

சின்ன வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

English Summary: Do not throw away the onion peel without knowing it: here are the super benefits! Published on: 30 April 2022, 02:38 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.