கோடை காலம் வந்துவிட்டது; இனிப்பான மற்றும் ஜூசியான தர்பூசணிகளை உண்பதற்கான நேரம் இது. இந்த சிவப்பு நிற கோடை பழத்தை அனைவரும் விரும்புகிறோம்; சரியா? இது சூப்பர் ஹைட்ரேட்டிங் மற்றும் எந்த நேரத்திலும் நமக்கு குளிர்ச்சித் தன்மையை வழங்கக்கூடிய பழமாகவும் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.
கீழ்கண்ட கருத்துக்கள், DK பப்ளிஷிங் ஹவுஸின் 'ஹீலிங் ஃபுட்ஸ்' புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளனவை, அறிந்திடலாம் வாருங்கள். தர்பூசணிகளின் சதையில் காணப்படும் சிட்ருலின் ஒரு முக்கியமான அமினோ அமிலம் ஆகும். இந்த அமினோ அமிலமானது, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதோடு, நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியைத் தூண்டும். மேலும், நச்சுத்தன்மையை நீக்கி உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக, இது கலோரிகளை குறைவாகப் பெற்றுள்ளது. இது சர்க்கரையின் அளவு மற்றும் பசியைக் கட்டுப்படுத்தச் சரியானதாக இருக்கிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த பழத்தைக் ஃபிரிட்ஜ்-இல் சேமித்து வைப்பது பழத்தில் உள்ள நன்மைகளை குறைக்கும் என்பது பலர் அறியாத உண்மையாகும். தர்பூசணிகளை ஃபிரிட்ஜ்-இல் சேமிப்பது எல்லா இடங்களிலும் மிகவும் பொதுவான நடைமுறைதான். ஆனாலும், வெப்பமான கோடை நாட்களில் குளிர்ந்த தர்பூசணிகளை ஃபிரிட்ஜ்-இல் வைப்பது, அதன் ஊட்டச்சத்து அளவைக் குறைக்கலாம் என USDA ஆல் நடத்தப்பட்ட ஆய்வு அவ்வாறு கூறுகிறது. வேளாண் மற்றும் உணவு வேதியியல் இதழில் வெளியிடப்பட்ட, வீட்டின் அறை வெப்பநிலையில் சேமிக்கப்படும் தர்பூசணிகள் குளிரூட்டப்பட்ட அல்லது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டதை விட அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஓக்லஹோமாவின் லேனில் உள்ள யுஎஸ்டிஏவின் தென் மத்திய வேளாண் ஆராய்ச்சி ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் பல பிரபலமான தர்பூசணி வகைகளை 14 நாட்களுக்கு சோதித்தனர். அவர்கள் இந்த தர்பூசணிகளை 70-, 55- மற்றும் 41 டிகிரி பாரன்ஹீட்டில் சேமித்து வைத்தனர். 70 டிகிரி ஃபாரன்ஹீட்டில் சேமித்து வைக்கப்பட்டவை, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்தவை என மூன்று நிலைகளில் வைத்தனர். இயல்பாக வைக்கப்பட்ட தர்பூசணி, ஃபிரிட்ஜ்-இல் வைக்கப்பட்ட தர்பூசணியை விட அதிக சத்துக்களைப் பெற்றிருந்ததை ஆராய்ந்து தெளிவு பெற்றுள்ளனர்.
தர்பூசணியானது, அதன் கொடியிலிருந்து எடுத்த பிறகும் சில சத்துக்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது என்றும் விளக்குகிறார்கள். இந்நிலையில், பழத்தை குளிரூட்டுவது முழு செயல்முறையையும் குறைக்கிறது அல்லது நிறுத்துகிறது. ஒரு தர்பூசணியின் வழக்கமான அடுக்கு வாழ்க்கை 14 முதல் 21 நாட்கள் ஆகும்.உண்மையில், குளிரூட்டப்பட்ட வெப்பநிலையில் அவை ஒரு வாரத்தில் அழுகத் தொடங்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலே காரணிகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் தர்பூசணிகளை இயல்பாக வீட்டின் அறை வெப்பநிலையில் வைத்து அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments