1. வாழ்வும் நலமும்

ஆளி விதை Vs. பூசணி விதைகள்; எது ஆரோக்கியமானது?

Ravi Raj
Ravi Raj

Flax seed Vs. Pumpkin Seeds..

மத்திய தரைக்கடல் உணவு அல்லது 'டாஷ்' (உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்துவதற்கான உணவு அணுகுமுறைகள்) போன்ற ஆரோக்கியமான உணவுத் திட்டங்களைப் பார்க்கும்போது, உணவுகளில் தொடர்ந்து விதைகளை  சேர்ப்பதை ஊக்குவிப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். எனவே, அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளைப் பற்றி அறிய இந்த இரண்டையும் ஒப்பிடுவோம்.

ஆளி விதைகள்:

ஆளிவிதை தாவர அடிப்படையிலான உணவாகும், இதில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது ஒரு "செயல்பாட்டு உணவு" என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் இது ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எடுத்துக்கொள்ளப்படும் உணவாகும்.

விதைகள், எண்ணெய்கள், தூள், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் மாவு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் ஆளிவிதை இப்போது கிடைக்கிறது. இது மலச்சிக்கல், நீரிழிவு, அதிக கொழுப்பு, இதய நோய், புற்றுநோய் மற்றும் பல்வேறு நோய்களைத் தவிர்க்க மக்களுக்கு உதவும் ஒரு உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

லிக்னான்கள், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆல்ஃபா-லினோலெனிக் அமிலம் (ALA), அல்லது ஒமேகா-3 போன்ற பாலியன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் அனைத்தும் ஆளிவிதையில் காணப்படுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.

பூசணி விதைகள்:

பூசணி விதைகள் அளவு சிறியதாக இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. ஒருவர் அவற்றை சிறிதளவு மட்டுமே உட்கொண்டாலும், அவர்களுக்கு நிறைய நன்மை பயக்கும் கொழுப்புகள், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் கிடைக்கும்.

மேலும், பூசணி விதைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாகும்.

ஆளிவிதை மற்றும் பூசணி விதைகளின் அடிப்படையை ஒப்பிடுதல்-

கலோரி உள்ளடக்கம்:

ஆளிவிதைகள் மற்றும் பூசணி விதைகள் சற்று வித்தியாசமான கலோரி எண்ணிக்கையைக் கொண்டுள்ளன, பூசணி விதைகளை விட ஆளிவிதைகள், சற்று கூடுதல் கலோரிகளைக் கொண்டுள்ளன.  1/4-கப் முழு ஆளி விதைகள் 224 கலோரிகளை வழங்குகின்றன, அதே சமயம் 1/4-கப் உலர்ந்த பூசணி விதை கர்னல்கள் உட்கொள்வதால் 180 கலோரிகளைக் கொண்டுள்ளன.

புரத உள்ளடக்கம்:

சிவப்பு இறைச்சி மற்றும் கோழிக்கு பதிலாக, ஆளிவிதைகள் மற்றும் பூசணி விதைகளை உணவுகளில் சேர்ப்பதன் மூலம், பல நன்மைகள் பெறலாம் என அமெரிக்க வேளாண்மைத் துறை பரிந்துரைக்கிறது. 1/4-கப் ஆளிவிதைகள் மற்றும் பூசணி விதைகள் முறையாக உணவில் எடுத்துக்கொள்வதால், 8 கிராம் முதல் 10 கிராம் புரதத்தை அளிக்கின்றன.

கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து:

பூசணி விதைகளை விட ஆளிவிதையில் அதிக நார்ச்சத்து உள்ளது. முழு ஆளிவிதைகள் குடல் இயக்கத்திற்கு உதவும் ஒரு மலமிளக்கியாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது. 1/4 கப் முழு ஆளிவிதையில் 12 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 11.5 கிராம் நார்ச்சத்து உள்ளது, 1/4 கப் பூசணி விதையில் 3 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும்  2 கிராம் நார்ச்சத்து உள்ளது. பெண்களுக்கு ஒரு நாளைக்கு 21 முதல் 25 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகிறது, ஆண்களுக்கு 30 முதல் 38 கிராம் வரை தேவைப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

எது சிறந்தது?

ஆளி விதைகள் மற்றும் பூசணி விதைகள் இரண்டையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தும். இருப்பினும், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகளின் அடிப்படையில் ஆளிவிதைகள் அதிக நன்மை பயக்கும்.

மேலும் படிக்க:

கடுகு எண்ணெய் Vs சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்: எது ஆரோக்கியமானது?

நெய் Vs வெண்ணெய்: எது ஆரோக்கியமானது?

English Summary: Flax seed Vs. Pumpkin Seeds; Which one is Healthier?

Like this article?

Hey! I am Ravi Raj. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.