உணவு என்பது நாவிற்கு ருசி சேர்க்கவோ வயிற்றின் பசி போக்கவோ இல்லை, அது உண்டபின் உயிரூட்டுவதாக இருந்தால் மட்டும்தான் உண்மையான உணவாகும். எனவே இதை படிக்க மட்டும் வேண்டாம் சிறிது சிந்திதிக்கவும் வேண்டும்.
இன்றைய உணவு முறையில் இரசாயனங்களின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவை உணவு பொருட்களின் மணமூட்டி, நிறமூட்டி மற்றும் பதப்படுத்தும் பொருட்களாகவும் உள்ளன. இந்த இரசாயனங்கள் நம் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் சீர்கேடுகளை நாம் உணரவேண்டும். தீங்கு விளைவிக்கும் இரசாயன உணவுப்பொருட்களுக்கு மாற்றாக உழவர்கள், உற்பத்தியாளர் நிறுவனங்களின் பாரம்பரிய உணவுப்பொருட்கள் மட்டுமே தீர்வாக அமையும் என்பது அசைக்க முடியாத சிந்திக்க வேண்டிய உண்மை.
இரசாயனங்கள் மற்றும் உருவாகும் நோய்கள்
எத்திலின் கினைக்கால்: குளிர்பானகள் உழைத்து கெட்டியாகாமல் இருக்க பயன்படுத்தப்படுகின்றன.
விளைவுகள்- கல்லீரல், பற்கள், எலும்புகள், சிறுநீரக பாதிப்புகள், மற்றும் பித்தப்பை கற்கள் உருவாக்க காரணமாகின்றன. குளிர் பிரதேச நாடுகளில் வாகனங்களின் ரேடியேட்டரில் உள்ள தண்ணீர் உறையாமல் இருக்க இந்த இரசாயனம் பயன்படுகின்றது.
கஃபின்: காபியில் உள்ள ஒரு நச்சுப்பொருள் இது கோலாபாணங்கள், சாக்லேட், கேக், போன்றவற்றில் கலக்கப்படுகின்றன.
விளைவுகள்- நரம்பு மண்டலத்தை தூண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு பின் சோர்வடைய செய்யும். அதனால் உறக்கமின்மை, பித்த அதிகரிப்பு, எலும்புத்தாது அடர்த்தி குறைதல் மற்றும் இரைப்பை அமிலம் அதிகரித்தல், ஜீரண கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஆல்பா அமைலேஸ், ஆலாக்சான்: புரோட்டா மென்மையாக இருக்க மைதாவில் கலக்கப்படும் இரசாயனம் இது.
விளைவு- இது கல்லீரலை பாதித்து சர்க்கரை நோய் வர ஏதுவாகின்றது.
பெட்ரோலியம் ஜெல்லி: கூந்தல் எண்ணெய் கெட்டியாக இருக்க கலக்கப்படும் இரசாயனம்.
விளைவு- உடல் சூடு அதிகரிப்பு, மாதவிடாய் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
பாதரசம்: மிகக் க்ரீம்களின் பளபளப்பு தன்மையை அதிகரிக்க சேர்க்கப்படுகிறது.
விளைவுகள்- முகத்தில் தோல் சுருக்கம், தோல் அலர்ஜி மற்றும் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும்.
சாக்கரின்: இனிப்பு சுவைக்காக சில குளிர்பானங்களில் சேர்க்கப்படுகின்றன.
விளைவு- சிறுநீரக பிரச்சனைகள்
மோனோ சோடியம் குளுட்டமேட்: உணவுப்பொருட்களின் சுவையை அதிகரிக்க இந்த இரசாயனம் பயனப்டுகிறது.
விளைவுகள்- கேட்ட கொழுப்புகளை அதிகரித்து இருதய நோய், அலர்ஜி, வாந்தி, தலைவலி, வயிற்று வலி மற்றும் நரம்பு மண்டல பாதிப்பினை ஏற்படுத்துகின்றன.
குளிர்பானங்களில் சேர்க்கப்படும் வண்ணங்களின் பாதிப்புகள்
மஞ்சள் சன்செட் எல்லோ
ஆஸ்துமா, தைராய்டு கட்டி, நரம்பு மண்டல பாதிப்புகள்.
பச்சை கிரீன் பி
அலர்ஜி உண்டாகும்/ சிகப்பு அசோரூபின்; ஒவ்வாமை, ஆஸ்துமா உண்டாகும்.
வெள்ளித்தகடு
நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் வயிற்றுப்புண் உண்டாகிறது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments