1. வாழ்வும் நலமும்

பாஸ்தா முதல் டெண்டர் சிக்கன் வரை சமைக்கும் ட்ரிக்ஸ்!

Dinesh Kumar
Dinesh Kumar
Simple tricks to make Tender Chicken.....

சமையல் கலை என்று சொல்வது சாதாரண வார்த்தை அல்ல. வேதியியலில் சில இரசாயன எதிர்வினைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் போலவே தான் சமையலும் என்பது குறிப்பிடதக்கது. இதுவும் ஒரு வேதியியல் பரிசோதனை போன்றதே ஆகும்.

சமையல் ட்ரிக்ஸ்:

பேக்கிங்கிற்கான பொருட்களைக் கலக்கும்போது மரக் கரண்டியைப் பயன்படுத்துவது மாவை மென்மையாக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு காரணம், இது வேறு எந்த உலோகம் அல்லது பிளாஸ்டிக் ஸ்பூனை விட நன்றாக கலக்க உதவுகிறது. மரக் கரண்டி வெப்பத்தை குறைப்பதால், கறிகளைக் கிளறவும், இது பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

சாகுபடியின் போது விளையும் காய்கறிகள் அல்லது பருவகால காய்கறிகளுடன் சேர்த்து சமைக்கும்போது, உணவின் சுவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இது உலகெங்கிலும் உள்ள சமையல்காரர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

மார்கெட்டிங் உத்தியால் டெண்டர் சிக்கன் என்ற வார்த்தை இன்று பிரபலமாகிவிட்டது. மென்மையான கோழி நன்கு மென்மையாகவும், ஜூசி சுவையுடனும் இருக்கும். எனவே சிக்கன் ருசியாக சமைக்க வேண்டும் என்றால், கோழியை சமைப்பதற்கு முன் பாலில் ஊற வைக்கவும். 48 மணி நேரம் நன்றாக ஊற விடவும். இவ்வாறு செய்வதால், சாப்பிடும்போது கெட்டியாக இருப்பதை விட மென்மையாக சுவையாக இருக்கும்.

பாஸ்தாவை அலசிவிட்டு அந்த தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு ஃபிரெஷாக தண்ணீர் ஊற்றி வேக வைப்பார்கள். ஆனால் அப்படி செய்யாமல் அதே தண்ணீரில் பாஸ்தாவை வேக வைப்பது நல்ல பதத்தை தரும் என்கின்றனர் சமையல் நிபுணர்கள்.

வீட்டிலேயே பிஸ்கட் செய்யலாம் என்றால் கண்டிப்பாக, இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடிக்கும்.

அதாவது மாவை நன்றாக பிசைந்தால் கெட்டியாகும் என்கிறார்கள். எனவே இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து மறுநாள் கூட பேக் செய்யலாம். சாப்பிட சூப்பரா இருக்கும்.

பாஸ்தா சமைக்கும் போது தண்ணீரில் சிறிது உப்பு சேர்ப்பது சிறந்தது என்கிறார்கள். ஏனெனில் இது பாஸ்தாவிற்கு சுவையை சேர்ப்பதோடு, அடர்த்தியான அமைப்பையும் தருகிறது.

காய்கறி கழிவுகள் குப்பையில் கொட்டப்படுவது வழக்கமாகும். ஆனால் அவற்றை தண்ணீரில் வேகவைத்து சமையலுக்கும் பயன்படுத்தலாம். இதனுடன் உப்பு சேர்த்து சாதாரண சூப்பாக குடிக்கலாம்.

தினமும் பயன்படுத்தும் கத்திகளை எப்போதும் கூர்மையாக வைத்திருந்தால் சமையலை எளிதாக செய்யலாம். இல்லையெனில், காய்கறி நறுக்குவதற்கு அதிக நேரம் எடுக்கும்.

சமைக்கும் போது சேர்க்கும் மசாலா அல்லது இலைகளை இரண்டாக நசுக்கினால் மசாலாவின் முழு சுவையும் கிடைக்கும் என்பது குறிப்பிடதக்கது. எனவே பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி அல்லது பட்டை, கிராம்பு, சீரகம் என உங்களுக்குப் பிடித்தவற்றைச் சேர்த்துப் பாருங்கள்.

மேலும் படிக்க:

கோழி பிரியர்களுக்காக பிரத்தியோகமாக உருவாக்கப் பட்ட, ஆன்டிபயாடிக் ஃப்ரீ சிக்கன் பற்றி தெரியுமா?

Chicken Nuggets இனி வீட்டிலேயே செய்யலாம்!

English Summary: From pasta to tender chicken..Simple tricks to make your cooking easier! Published on: 10 May 2022, 03:54 IST

Like this article?

Hey! I am Dinesh Kumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.