1. வாழ்வும் நலமும்

கரம் மசாலா பயன்படுத்துவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்

T. Vigneshwaran
T. Vigneshwaran

Health Benefits of Garam Masala

மசாலாப் பொருள் என்பது உலர்ந்த விதை, பழம், வேர், பட்டை, இலை அல்லது பதியமுறையான பொருள்களை உணவில்  உபயோகிப்பது ஆகும். நறுமணச்சுவை, நிறம் போன்றவற்றிற்காக அல்லது தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்வதற்கு அல்லது அதன் வளர்ச்சியைத் தடுப்பதற்கு உணவு சேர்க்கையாக ஊட்டச்சத்தாக சிறிய அளவில் மசாலா சேர்க்கப்படுகிறது.

அதுபோல் மக்கள் அடிப்படையாகப் பயன்படுத்தும் ஒரு மசாலாப் பொருள் தான் கரம் மசாலா (Garam Masala). கரம் மசாலா பல்வேறு மசாலா பொருட்களின் கலவையாக தயாரிக்கப்படுகிறது.  இதனால் இது சைவம் அசைவம் என அனைத்து உணவுகளிலும் உபயோகிக்கப்படுகிறது. கிராம்பு, இலவங்கபட்டை, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கருப்பு மிளகு ஆகிய பொருட்களை அரைத்து கரம் மசாலா தயாரிக்கப்படுகிறது. இது நமது ஆரோக்கியத்திற்கு (Health Benefits) பல வழிகளில் நன்மை அளிக்கிறது. எனவே மசாலா பொருட்களினால் பல நன்மைகள் மற்றும் சில பக்க விளைவுகளும் உள்ளன.

செரிமானத்தை மேம்படுத்தும்(Improving digestion)

செரிமானத்தை மேம்படுத்துவதில் கரம் மசாலா முக்கிய பங்கு வகுக்கிறது . இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இந்த மசாலா வயிற்றில் இரைப்பையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கத்திற்கு பயனளிக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்(Beneficial for heart health)

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கரம் மசாலா மிகவும் நன்மை அளிக்கிறது. கரம் மசாலாவில் ஏலக்காயின் நன்மையும் உள்ளது. இது உங்கள் இதயத்திற்கு நன்மை பயக்க கூடியது என்று கருதப்படுகிறது. மேலும் இந்த மசாலாவை உணவில் சேர்த்துக்கொள்வது மூலம் உங்கள் இரத்த அழுத்த அளவை சீராக்க முடியும். மேலும் இது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்(Reducing the risk of cancer)

புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை தடுக்க கரம் மசாலா உதவுகிறது. மேலும் கரம் மசாலா பல்வேறு ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. எனவே அவை உடலில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் குறைக்கின்றன.

வலி மற்றும் வீக்கம்(Pain and swelling)

கரம் மசாலா பொருட்களில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.அவை வலி மற்றும் வீக்கத்தை குறைப்பதில் சிறந்ததாக கருதப்படுகிறது.

சளி மற்றும் இருமலுக்கு நிவாரணம்(Relief for colds and coughs)

சளி மற்றும் இருமல் பிரச்சனைகள் வருவது பொதுவானது. கிராம்பு, கறுப்பு மிளகு மற்றும் இலவங்கப்பட்டை போன்ற பொருட்கள் அத்தகைய வியாதிகளை உடனடியாக குணப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க:

Benefits of lemon: எலுமிச்சையில் இருக்கும் வியக்க வைக்கும் நன்மைகள்!

பருவ காலங்களில் கீரைகள் மற்றும் இலை காய்கறிகளை சாப்பிட கூடாது!!!

English Summary: There are numerous benefits of using garam masala

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.