முடி உதிர்தல், பொடுகு பிரச்சனை என்று சொல்பவர்கள், தலைமுடியை சரியாகப் பராமரிக்கிறீர்களா? தலைமுடி பராமரிப்பில் அனைவரும் ஷாம்புவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆனால் பலருக்கு சரியான ஷாம்பூவைக் கொண்டு முடியைக் கழுவத் தெரியாது என்பதுதான் உண்மை. ஷாம்பூவை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே பலன் கிடைக்கும்.
ஷாம்பு செய்யும் போது கவனமாக இருங்கள் (Be careful while shampooing):
குளிப்பதற்கு முன் தலையில் எண்ணெய் தடவுவது நல்லது. உச்சந்தலையில் எண்ணெய் நன்றாக உறிஞ்சப்பட்ட பின்னரே ஷாம்பு பயன்படுத்த வேண்டும். ஷாம்பு செய்த பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்த மறவாதீர்கள். உச்சந்தலையை ஒருபோதும் நகங்களால் மசாஜ் செய்யக்கூடாது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஷாம்பு அல்லது எண்ணெய் எதுவாக இருந்தாலும் உங்கள் விரல் நுனியில் மசாஜ் செய்யுங்கள்.
ஷாம்பூவை நேரடியாக தலையில் ஊற்றக் கூடாது. ஷாம்பூவை சிறிதளவு தண்ணீரில் டைலியுட் செய்துக் கொள்ளுங்கள், அதை நன்றாக தலையில் தடவி, மெதுவாக உங்கள் தலைமுடிக்கு தடவவும். இப்படி செய்வதால் உங்கள் தலைமுடி சுத்தமாகும். உங்கள் தலைமுடியை சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சிறிய அளவு ஷாம்பு கூட முடியில் இருக்கக்கூடாது. இதனால் பொடுகு ஏற்படும். வெந்நீரில் குளித்தாலும், சாதாரண நீரில் தலையைக் கழுவ முயற்சிக்க வேண்டும்.
நீங்கள் தினமும் தலைமுடியைக் கழுவினால்:
உங்கள் உச்சந்தலையில் உலர்த் தன்மை இருப்பின், உங்கள் தலைமுடியை தினமும் கழுவக்கூடாது. ஏனெனில் இது உங்கள் உச்சந்தலையை மேலும் வறட்சியாக்கும். இதனால் பொடுகு மற்றும் முடி உதிர்வு ஏற்படுகிறது. மேலும் தினமும் உங்கள் தலைமுடியைக் கழுவுவது உங்கள் தலைமுடியை கடினமாக்கும். வாரத்தில் இருமுறை மட்டும் ஷாம்பு போட்டு தலைமுடி கழுவுவது, ஆரோக்கியத்திற்கு நல்லது. உங்கள் தலைமுடி எண்ணெய் பசையா, வறண்ட முடியா அல்லது சாதாரண முடியா என்பதை அறிந்துகொள்வது ஷாம்பு மற்றும் கண்டிஷனர் வாங்க உதவும் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: உடல் எடை குறைக்க Liquid Diet இதோ!
ஷாம்பூவை எப்போது மாற்ற வேண்டும்:
உங்கள் தலைமுடி நிறம் மாறத் தொடங்கும் போது மிகவும் கவனமாக இருங்கள். தவறான ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது, முடியின் நிறம் மங்கி, பொலிவு குறைகிறது. முடி உதிர்ந்தாலும் ஷாம்பூவை மாற்றவும். நீங்கள் சரியான ஷாம்பூவைப் பயன்படுத்தினால், உங்கள் முடியின் இயற்கையான அமைப்பைப் பராமரிக்கலாம்.
கண்டிஷனர் கட்டாயமா?
முடி பராமரிப்பில் ஷாம்பு மட்டுமே முக்கியப் பங்கு என்று நீங்கள் நினைத்தால், இது தவறான முடிவாகும். கண்டிஷனர்களின் பயன்பாட்டையும் வலியுறுத்த வேண்டும். கண்டிஷனர் முடியின் பொலிவை அதிகரிக்கவும், வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. தலைமுடியில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன், ஷாம்புவும் முடியின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி விடுகிறது. ஆனால் கண்டிஷனர் இதை சரிசெய்ய முடியும். குளோரினேட்டட் நீரில் இருந்து முடியைப் பாதுகாப்பது மற்றும் முடி உடைவதைக் குறைப்பது போன்ற பல பிரச்சனைகளை கண்டிஷனர்கள் தீர்க்கும். ஷாம்புவுடன் கண்டிஷனரைப் பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க:
உற்சாகமான காலையைத் தொடங்க 5 நிமிடத்தில் ரேடியாகும் காலை உணவுகள்!
வீட்டில் கோல்டன் ஃபேஷியல் செய்வதற்கான அடிப்படை செயல்முறை அறிக!
Share your comments