1. வாழ்வும் நலமும்

மழைக் காலத்தில் ஏற்படும் சிறுசிறு தொல்லைகளுக்கு வீட்டு வைத்தியம்

R. Balakrishnan
R. Balakrishnan
Home remedies for minor ailments

மழை காலங்களில் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்ற பிரச்னைகள் வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. எளிதாகக் கிடைக்கக்கூடிய கற்பூரவல்லி, துளசி, தூதுவளை போன்றவற்றை கொண்டு இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம்.

கற்பூரவல்லியை பயன்படுத்தி மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • கற்பூரவல்லி
  • புதினா
  • மஞ்சள் பொடி.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா (Pudina), சிறிது மஞ்சள் பொடி (Turmeric) சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும்.

துளசியை பயன்படுத்தி சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • துளசி
  • ஜாதிக்காய் பொடி
  • சுக்குப் பொடி

பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது. இந்த தேநீர் செரிமானத்தை தூண்டுகிறது. இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது. நெஞ்சக சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது.

தூதுவளையை பயன்படுத்தி நெஞ்சக சளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • தூதுவளை
  • ஆடாதோடை இலைப் பொடி
  • திரிகடுகு சூரணம்
  • பனங்கற்கண்டு

பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர் விடவும். இதில் தூதுவளை இலையை போடவும். இதனுடன் அரை ஸ்பூன் ஆடாதோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி (Cold) கரையும். தொண்டை வலி சரியாகும். சுவாச
பாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.

மேலும் படிக்க

சளி காய்ச்சலை விரட்டியக்கும் வீட்டு வைத்தியம்

மக்களே உஷார்: கொரோனா வைரஸ் போல மற்றொரு தொற்றுநோய்!

English Summary: Home remedies for minor ailments during the rainy season Published on: 15 October 2021, 07:41 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.