1. வாழ்வும் நலமும்

ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்!

KJ Staff
KJ Staff
Credit : Maalai Malar

ஆப்பிளைத் (Apple) தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை (Poison) உள்ளது என்கிற கூற்று சமீப காலமாக மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இதனாலேயே, சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர். உண்மையிலேயே ஆப்பிளின் தோல் விஷத்தன்மை கொண்டதா.? ஆப்பிளை எப்படித்தான் சாப்பிடுவது? வாருங்கள் தெரிந்துகொள்வோம்!

ஆப்பிளில் உள்ள சத்துக்கள்:

ஆப்பிளின் சதைப்பகுதி மட்டுமல்ல, அதன் தோலிலும் பல வகையான நன்மைகள் உள்ளன. ஆப்பிளின் சத்து அதன் தோலுடன் சேர்ந்தே தான் உள்ளது. ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி (immunity) அதிகரிக்கிறது. பசியின்மையை போக்கும். வைட்டமின் சி (Vitamin C), பொட்டாசியம் (Potassium), பாலிபினால்கள் (Polyphenols), ஃபிளேவனாய்டுகள் (Flavonoids) நிறைந்துள்ளன. அதோடு தோலில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமானப் பிரச்னை இருக்காது. அதேசமயம் மலச்சிக்கல் பிரச்னையும் வராது. கொழுப்பு அளவு குறைந்து உடல் எடை சீராக இருக்கும். தசைகளின் ஆரோக்கியமும் உறுதியாக இருக்கும்.

ஆப்பிள் தோலில் மெழுகு:

ஆப்பிளுக்கான தேவை எப்போதுமே அதிகம் என்பதால், கெமிக்கல் முறையில் பழுக்க வைத்தல், அதோடு அதன் தோலை பளபளக்க வைக்க மெழுகு (Wax) தேய்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மெழுகானது வயிற்றுக்குள் சென்றால், பலவகையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும் என்பதாலேயே தோலை நீக்கிவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறனர். அதாவது வயிற்றுப் போக்கு, வாயுத்தொல்லையை உண்டாக்கும். மேலும் மெழுகு செரிமானமாகாமல் உணவுக்குழாயில் படிந்து நோயை உண்டாக்கும். புற்றுநோய் (Cancer), குடல் அழற்சி போன்றவையும் வர வாய்ப்புண்டு என்கின்றனர் மருத்துவர்கள்.

மெழுகைக் கண்டறியும் முறை:

ஆப்பிளை வாங்கும்போது தோலை சுரண்டிப் பாருங்கள். வீட்டிலும் கத்தியால் மேலோட்டமாக சுரண்டினால் மெழுகு (Wax) மட்டும் தனியே வரும். இந்த மெழுகானது கழுவினால் போகாது. அப்படியில்லை எனில் சாப்பிடும் முன் ஆப்பிளை சுடு தண்ணீரில் (Hot Water) சில நிமிடங்கள் போட்டுவிட்டு பார்த்தால் ஆப்பிள் மீதுள்ள மெழுகு படிவம் நன்றாகத் தெரியும். பின் கத்தியால் தோலை சுரண்ட மெழுகு எளிதில் வந்துவிடும். ஆப்பிள் அழுகாமலும், பளபளப்பாகத் தெரியவும் மெழுகு பூசப்படுவதால், இனி மக்கள் விழிப்புடன் (Awarness) இருக்க வேண்டும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

பள்ளிகளில் மதிய உணவில் தேன், காளான்! மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரை!

கொழுப்பைக் குறைக்க தினமும் சாப்பிடுங்கள் பிஸ்தா!

செரிமானத்தைத் தூண்டும் தான்றிக்காய்! இயற்கை அளித்த வரப்பிரசாதம்!

English Summary: Is it dangerous to eat apples with skin? Ways to remove wax coated on apple Published on: 25 October 2020, 07:06 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.