இயந்திர மயமாகிவிட்ட வாழ்வில், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்தும் அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில், உடலுக்கும், மனதிற்கும் ஆரோக்கியத்தை அளிப்பதில், யோகா, தியானம் ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன.
உடல், மூச்சு, உள்ளம், ஆளுமை, மனம் என்று பல தளங்களில் யோகா வேலை செய்கின்றது. அதனால்தான் யோகா பயிற்சியை அன்றாடம் மேற்கொண்டு பல அற்புதப் பலனை அனுபவித்துள்ளனர் நம் முன்னோர்கள். இந்தியர்களைப் பொருத்த வரை இதை ஒருவகையிலான பாரம்பரிய மருத்துவம் என்றே கூறலாம்.
அந்த யோகப் பயிற்சியின் பலனாகத்தான் நம் முன்னோர்கள் பலர் மெய், வாய், செவி, கண், மூக்கு என ஐம்புலன்களையும் அடக்கி நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்பதே உண்மை. ஆனால், நவீனமாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் யோகாவின் பலனை அனுபவிக்க நம்மில் பலரும் மறந்து வருகிறோம்.
சர்வதேச யோகா தினம் - International Day of Yoga
யோக பயிற்சியின் பலன்களை உலக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள ஏதுவாக, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா சபை (United Nations General Assembly)
அறிவித்தது .
அதன்படி கடந்த 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், 6வது ஆண்டு சர்வதேச யோகா தினம் (International Day of Yoga) இன்று கொண்டாடப்படுகிறது.
யோகா தினத்தின் போது பிரதமர் மோடி, மத்திய- மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரு பொது இடத்தில் கூடி யோகா பயிற்சியை மேற்கொள்வது வழக்கம், ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக யோக தினத்தை குடும்பங்களுடன் அவரவர் வீட்டில் கொண்டாட ஆயுஷ் அமைச்சகம் (Ministry of AYUSH )அறிவுறுத்தியுள்ளது.
இதனால் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ஆரோக்கியத்திற்கு யோகா, வீட்டில் யோகா (Yoga for Health - Yoga at Home) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யோகா தரும் நன்மைகள்
ஆரோக்கியம், ஆனந்தம், அன்பு, மன அமைதி என உங்கள் தேடல் இதில் ஏதுவாக இருந்தாலும் அதனைத் தரும் மருந்தாக இருந்து வருகிறது யோகாசனங்கள்.
தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம்
யோக பயிற்சிகள், போராட்டங்களைக் குறைத்து மிக எளிதாக வாழ்வை எதிர்கொள்ள உதவுகிறது. தோல்வியை எதிர்கொள்ளும் பக்குவம், அலைபாயாத மனம், பற்று அற்ற வாழ்க்கை, ஆசையை அடக்கும் கைப்பக்குவம் போன்றவற்றை நமக்கு பழக்குகிறது.
தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியினால், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு போன்றவை வளர்க்க முடியும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்த முடியும். மனநோய்களான மன இறுக்கம், பயம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
பால் போல் வெண்மையான முகம் பெற இதை செய்தால் போதும்!
உடல் வலிமைக்கு
முறையாக யோகா செய்வதால் உடலின் பலவீனமான பகுதிகள் வலுவடைகிறது மேலும் தசை வலுவால் உடல் அமைப்பு அழகாகும். உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள யோகா உதவுகிறது. கால்களைத் தலைக்கு மேல் கொண்டு வருவது, கைகளை மடக்குவது போன்ற முறைகள் இதில் கடைப்பிடிக்கப்படுவதால் கை கால்களுக்கு இலகுத் தன்மையைப் பெறுகிறது. இதனால் நீங்கள் எந்த வேலை செய்தாலும் உடனே உடல் வளைந்து கொடுக்கும்.
நோய்களிடம் இருந்து பாதுகாப்பு
தினமும் யோக செய்வதன் மூலம் நாம் நோய்களிலிருந்தும் விடுபடலாம். யோகா நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியை அதிகரிக்கிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. யோகாவின் மூலம் இதய நோய்களைக் கூட குணப்படுத்த முடியும். இதனால் இரத்த ஓட்டம் சீரடைந்து இரத்த அடைப்பை போக்கி ஆரோக்கியமான இதயத்தை பெற முடியும். யோகா செய்வதால் நுரையீரல்களைச் சீர்படுத்தி சீரான சுவாசத்தைப் பெறலாம். அதிலும் ஆழமான மூச்சுப் பயிற்சி உடல் வலிமையைக் கூட்டி மன அழுத்தத்தை நீக்கலம்.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!
தவிர்க்க வேண்டியது என்ன?
யோகா செய்ய வேண்டுமெனில் உணவில் கட்டுப்பாடு அவசியமாகும். மது, புகையிலை, சிகரெட், இனிப்பு, எண்ணெய் பதார்த்தங்கள், துரித உணவு (Fast food) போன்ற உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். உணவு உண்டபின் ஆசனம் செய்யக்கூடாது.
யோகா செய்வதற்கு ஏற்ற நேரம் அதிகாலை ஆகும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்வதினால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் அரைமணி நேரம் பயிற்சி அந்நாள் முழுவதற்கும் போதுமானது.
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
Share your comments