சாப்பாடுன்னு நினைக்கும்போதே நாக்கில் சட்டென்று நீர் சுரக்கும். அதிலும் நெய் மணக்கும், சாம்பார், நெய்யில் வறுத்து செய்த கேசரின்னாக் கேட்கவே வேண்டாம். அந்த அளவுக்கு உணவுக்குத் தனி ருசியைத் தருவது என்றால், நெய்யைத் தவிர வேறில்லை.
இருந்தாலும், நெய் உடல் எடையை அதிகரிக்கும் ஆரோக்கியமற்ற உணவுப்பொருளாகவே சித்தரிக்கப்படுகிறது. உண்மை இதற்கு முற்றிலும் மாறுபட்டது என்பதே நிதர்சனம்.
வைட்டமின்கள் A, E, D மற்றும் நல்ல கொழுப்பு ஆகியவற்றைக் கொண்ட நெய், நம் உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் ஒன்று. ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிறைந்த நெய், மூளை மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது.
வீட்டில் தயாரிக்கப்படும் சுத்தமான நெய்யில், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வைட்டமின்களும், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களும் நிறைந்திருக்கின்றன. அவை உடல் எடையைக் குறைக்கத் தவறாமல் உதவுகின்றன.
அதுமட்டுமா, வயிற்றில் ஏற்படும் தொப்பைக்கு காரணமான கொழுப்புகள் நீங்கவும் சுத்தமான பசு நெய் பயன்படுகிறது என்பது ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து. கொழுப்புகளை அகற்றப் பயன்படும் நெய், செரிமானத்தை சிராக்கி, உடலைக் கட்டுக்கோப்பாக வைக்கவும் உதவுகிறது. சாப்பிடுபவர்களுக்கு பலவித நன்மைகளை அளிப்பதால், சந்தையின் விற்கப்படும் அனைத்து எண்ணெய்களைக் காட்டிலும் சிறந்தது பசு நெய்.
நெய்யின் மருத்துவப் பயன்கள்
இருமலைப் போக்குகிறது (Ghee cures cough)
ஒரு டீஸ்பூன் நெய்யை சூடாக்கி, அதில் இஞ்சிப் பொடியைபோட்டு சாப்பிட்டால், இருமல் வந்த வழி தெரியாமல் ஓடிவிடும்.
பார்வையை மேம்படுத்துகிறது ( Ghee improves eyesight)
ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை, நெய், நம் கண்பார்வையை மேம்படுத்தி, கண் தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது ( digestive tract)
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக, ஒரு டீஸ்பூன் நெய்யை எடுத்துக்கொண்டால், அது ஜீரணத்தை சீராக்கி, முறையாக மலம் வெளியேறுவதில் உள்ள சிக்கலை நீக்கிவிடுகிறது.
இதய ஆரோக்கியம் (heart health)
உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க, நெய் உதவுகிறது. இதனால், இதய ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது.
நோய் எதிர்ப்புச் சக்தி ( boosts the immune system)
நெய்யில் நிறைந்துள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (antioxidants), நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள உதவுகிறது. எனவே உடலை நோய் தாக்குவதற்கான வாய்ப்பும் குறைகிறது.
நல்ல கொழுப்பை அளிக்கிறது (provides healthy fats)
உயிரணுக்களில் இருந்து நச்சுகளை அகற்ற நெய் உதவுகிறது, இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. அவ்வாறு வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்கும்போது, நம்மால் எளிதாக உடல் எடையை இழக்க முடிகிறது.
எனவே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், தினமும் இரண்டு ஸ்பூன் நெய் தவறாமல் உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்.
மேலும் படிக்க...
நீண்ட ஆயுளைப் பெற வாழை இலைக்கு மாறுங்கள்!- நோய்களுக்கும் குட்பை சொல்லலாம்!
தைராய்டு பிரச்னை வராமல் தடுக்கும் செம்பு பாத்திரம்! 10 மருத்துவப் பயன்களின் பட்டியல் இதோ !
Share your comments