1. வாழ்வும் நலமும்

அசெளகரியத்தை தீர்க்கும் வசம்பின் மருத்துவ குணங்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

வசம்பு பாரம்பரிய பராம்பரியமாக பயன்படுத்தி வரும் மருத்துவ பொருளாகும். இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தும் சிறந்த பொருளாகும். அதனால் தான் இது "பிள்ளை வளர்ப்பான்" என்றும் அழைக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு இந்த வசம்பை கையில் காப்பு மாதிரி கட்டுவார்கள்.

இது குழந்தையின் வயிற்றில் ஏற்படும் வாயுத் தொல்லை, வயிற்றில் ஏற்படும் அசெளகரியம், நெஞ்சு சளி போன்றவற்றை குணப்படுத்துகிறது. இந்த கையில் வசம்பு கட்டும் முறையை குழந்தை பிறந்த 12 வது நாட்களில் செய்கின்றனர்.

வசம்பை கடிப்பதால் பிறந்த குழந்தைகள் தங்கள் கையில் கட்டப்பட்டுள்ள வசம்பை கடிப்பதால் அதன் மருத்துவ சத்துக்கள் உள்ளே நுழைந்து வயிற்று பிரச்சினைகளை விரைவில் களைகிறது. குழந்தைகள் பொதுவாக தங்களுடைய கையில் கிடப்பதை எடுத்து வாயில் போட்டுக் கொள்வார்கள். மண்ணெல்லாம் வயிற்றுக்குள் போகும். இந்த வசம்பை சப்பிக் கொண்டிருந்தால் உடலில் உள்ள கழிவுகள் முற்றிலுமாக வெளியேறி விடும்.

வயிறு வீக்கம்

 வசம்பை தீயில் சுட்டு பொடியாக்கி அதை தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது வயிறு வீக்கம் அல்லது வயிறு உப்புசம் ஆகியவை சரியாகி விடுகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இந்த வயிறு உப்பசம் ஒன்று. பால் ஜீரணமாக அதிக நேரம் பிடிக்கும் என்பதால் அவர்களுக்கு வயிறு உப்பசம் அடிக்கடி உண்டாகும்.

பூச்சு நெருங்காமை

வசம்பை சாம்பலாக்கிய பொடியை தண்ணீருடன் குழைத்து குழந்தையின் நெற்றியில் பொட்டு இட்டு வர பால் வாடைக்கு எந்த பூச்சும் பல்லி போன்றவை குழந்தையை அண்டாது. வசம்பு பொடியை குழந்தைக்கு பூசி விடுவதாலும், படுக்கையை சுற்றி தூவி விடுவதாலும் குழந்தையை பூச்சுகள் அண்டாது. பெரியவர்கள் படுக்கும் இடத்தில் வசம்பையும் பயன்படுத்தலாம். உலர்ந்த அல்லது பச்சையாக உள்ள புதினா இலைகளையும் சுற்றிலும் தூவி விடலாம்.

வாய்வு தொல்லை

 வசம்பை சாம்பலாக்கிய பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் குழைத்து குழந்தையின் வயிற்றில் தடவி வந்தால் வாய்வுத் தொல்லை நீங்கும். ஒரு சிறு குத்தியில் குத்தி லேசான தீயில் வசம்பை நன்கு கரியாகும் வரை சுட்டு எடுக்க வேண்டும். பின்னர் குழநதைக்குப் பயன்படுத்தும் எண்ணெயில் குழைத்து வயிற்றுப் பகுதியில் தடவலாம். பெரியவர்களும் கூட இந்த முறையைப் பயன்படுத்தலாம். மிகவும் குளிர்ச்சியான உடல் கொண்டவர்களாக இருந்தால் தேங்காய் எண்ணெயும் சூட்டு உடலாக இருந்தால் விளக்கெண்ணெயும் பயன்படுத்துவது நல்லது.

பால் மட்டும் போதும்

வசம்பையும் தேனையும் குழைத்து கொடுக்கும் போது குழந்தைக்கு பால் மட்டுமே உணவாக கொடுத்து வந்தால் விரைவில் வயிறு பிரச்சினை சரியாகி விடும். பொதுவாக குழந்தைகள் ஒரே இடத்தில் இருப்பதால் உண்ணும் உணவு செரிப்பதற்கு வெகுநேரம் பிடிக்கும். அதனால் மருந்துகள் கொடுப்பதற்கு முன்னால் வயிறு முட்ட அவர்களுக்கு பாலோ வேறு உணவோ கொடுக்காமல் அரை வயிறு உணவு கொடுத்தால் போதுமானது.

இருமல்

 வசம்பு மற்றும் அதிமதுரம் கொண்டு தயாரிக்கப்படும் மருந்து இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்று வலிக்கு உதவுகிறது. நீண்ட நாள் மற்றும் வறட்டு இருமல் இருந்தால், வசம்பு மற்றும் அதிமதுரப் பொடியை சிறிது தேனுடன் கலந்து, இரவில் சாப்பிட்டு வர இருமல் வேகமாக குணமடையும். அதிமதுரப் பொடியை பாலில கலந்தும் குடித்து வரலாம். அவ்வாறு குடிக்கும் பொழுது அதிலேயே அதிக அளவிலான இனிப்பு இருப்பதால் தேனோ அல்லது வேறு இனிப்புகளோ பயன்படுத்தத் தேவையில்லை.

மூளை வளர்ச்சி

 இந்த மருந்து குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. மேலும் குழந்தைக்கு நல்ல பேச்சு திறன், நல்ல கண் பார்வை திறன், அழகு, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல் போன்ற எண்ணற்ற பலன்களை அள்ளி வழங்குகிறது.

வயிற்று போக்கு

வசம்பு, காயம், அதிவிடயம், சுக்கு, மிளகு, திப்பிலி மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதை 1-2 கிராம் அளவு குழந்தைக்கு கொடுத்து வந்தால் சீரணமின்மை, வயிற்று போக்கு மற்றும் வாய்வு போன்றவற்றை குணமாக்கும்.

மேலும் படிக்க...

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Medicinal properties of Vasambu Published on: 30 January 2019, 05:39 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.