1. வாழ்வும் நலமும்

தூக்கி எறியப்படும் "சிலிக்கா ஜெல்" பாக்கெட்டில் இவ்வளவு பயன்களா?

Daisy Rose Mary
Daisy Rose Mary

கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும். அதை சிறுவயதில் நாம் எடுக்கும்பாழுது, விஷம் அதைத் தொடக்கூடாது என்று பெற்றோர்கள் சொல்லியிருப்பார்கள்.

புதிதாக வாங்கி வந்த பொருளை அவருக்குள் இருந்து பிரித்துவிட்டால் போதும் உடனே அந்த பாக்கெட்டை தூக்கி கீழே வீசிவிடுவோம். ஆனால் அந்த பாக்கெட்டுக்குள் இருக்கும் சிலிக்கான் ஜெல்லை நாம் கீழே தூக்கிப் போடுவதற்கான நமக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அது நம்முடைய வீட்டில் பல்வேறு விதங்களில் பயன்படுகிறது.

சமையலறையில்...

பொதுவாகவே வீட்டில் சமையலறைதான் எப்போதுமே அதிக ஈரப்பதத்துடன் இருக்கும். அதனால் தான் நாம் வைத்திருக்கிற மசாலாப் பொருட்கள், சர்க்கரை போன்றவை கெட்டியாகிவிடுவது, நமத்துப் போவது போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. அப்படி மசாலாப் பொருட்கள் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்க இந்த சிலிக்கான் ஜெல்லை பயன்படுத்த முடியும்.

நாம் மசாலாப் பொருட்கள் வைத்திருக்கும் இடத்துக்கு அருகில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தால் போதும். சமையலறையில் இருக்கின்ற ஈரப்பதத்தை இந்த சிலிக்கான் ஜெல் உறிஞ்சிக் கொள்ளும். எப்போதும் சமையலறைப் பொருள்கள் பிரஷ்ஷாகவே இருக்கும்.

மொபைல் நீரில் விழுந்தால்...

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இந்த பிரச்சினை அடிக்கடி நிகழ்வதுதான். அதுதாங்க... செல்போனை தண்ணிக்குள்ள போட்றது.

நாம் எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் போடுகின்ற மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றைக் கழட்டிவிட்டு, ஒரு கிண்ணத்தில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு அதற்குள் ஈரமான புானை போட்டு வைத்தாலே போதும், அதற்குள் இருக்கிற ஈரத்தை உறிஞ்சிவிட்டு, மொபைலை புதுசுபோல் மாற்றிவிடும். ஆனால் ஜார்ஜ் போடுவதற்கு முன்பு அதை காற்றோட்டமாக ஒரு நாள் வைத்திருந்துவிட்டு பின் சார்ஜரில் இணைப்பது நல்லது.

ஆவணங்கள்

வீட்டில் இருக்கின்ற முக்கியமான ஆவணங்கள், பத்திரங்கள், சான்றிதழ்கள், ஆதார் கார்டுகள் போன்றவை வீணாகிப் போய்விடாமல் செல்லரித்து விடாமல் அப்படியே இருக்க வேண்டுமென்றால் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுகளை எடுத்து இந்த ஆவணங்களை வைத்திருக்கும் பெட்டியிலோ பையிலோ போட்டு வைத்திருங்கள்.

துணிகள் காயவைக்க

நாம் துவைத்து முடித்த ஈரமான துண்டோ அல்லது மற்ற துணி வகைகளோ உடனடியாக உலர்த்த வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த சிலிக்கான் ஜெல் பெரிதும் உதவிசெய்யும்.

ஒரு பக்கெட்டில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு துணிகளைப் போட்டு அதில் ஊறவைத்தால் போதும் துணிகள் உடனடியாக காய்ந்துவிடும்.

கத்தி கூர்மையாக

பொதுவாக நாம் தினமும் பயன்படுத்துகின்ற கத்தி, ரேசகள், பிளேடுகள் ஈரப்பதத்தால் வேகமாகவே மழுங்கிப் போய்விடும். அப்படி மழுங்கிப் போகாமல் கூர்மையாகவே இருக்க வேண்டுமென்றால், கத்தியெல்லாம் போட்டு வைத்திருக்கின்ற டப்பாக்களில் இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் கத்திகள் மழுங்கிப் போய்விடாமல் இருக்கும்.

துர்நாற்றம்

எப்போதாவது பயன்படுத்துகிற பொருட்கள், உடற்பயிற்சி சம்பந்தப்பட்ட பொருள்கள், விளையாட்டுப் பொருட்கள் போட்டுவைக்கும் கவர்கள் ஆகியவற்றில் எப்போதும் ஒருவித துர்நாற்றம் வீசும். அப்படி துர்நாற்றம் வீசாமல் இருக்க இந்த சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களை அதற்குள் போட்டு வையுங்கள். துர்நாற்றமும் வீசாது. பொருட்களும் புதுசுபோலவே பளபளக்கும்.

வளர்ப்பு பிராணிகள்

நம்முடைய வீடுகளில் வளர்ப்பு பிராணிகளுக்கு பிஸ்கட்டுகள் மற்றும் வேறு சில உணவுகளை கவர்களில் வைத்திருப்போம். அவற்றை நம்முடைய உணவைப் போல சுகாதாரமாக வைத்திருக்க முயந்சி செய்வதில்லை. அதனால் வேகமாகக் கெட்டுப்போய்விடும். அதை தவிர்க்க வேண்டுமென்றால் அந்த உணவு கவர்களில் சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வையுங்கள்.

நகைகள்

பொதுவாக நாம் வைத்திருக்கும் நகைகளை தினமும் பயன்படுத்துவது கிடையாது. அப்படியே பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்போம். அது நாளடைவில் மங்கிவிடுவது போன்று தோன்றும். இதுவே அந்த நகைப் பெட்டிக்குள் சில சிலிக்கான் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்திருந்தால் நகை பதுசு போல் அதே பளபளப்புடன் இருக்கும்.

அலங்காரப் பொருட்கள்

வீட்டில் சில முக்கிய தினங்களன்று மட்டும் தான் அலங்காரங்கள், தோரணங்கள் போன்றவற்றைத் தொங்கவிடுவோம். முடிந்ததும் அந்த பொருட்களில் சிலவற்றை அடுத்த ஆண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அட்டைப் பெட்டிக்குள் போட்டு வைத்திருப்போம். அடுத்த வருடம் எடுத்துப் பார்த்தால் அதன் நிறங்கள் மங்கியிருக்கும். இதுவே சிலிக்காள் ஜெல் பாக்கெட்டுக்களைப் போட்டு வைத்தால் நிறம் மங்காமல் புதுசுபோலவே இருக்கும்.

ஜன்னல்கள்

நம்முடைய வீட்டின் ஜன்னல்கள், வாயிற்படி போன்ற ஈரத்தை உறிஞ்சும் மர வேலைப்பாடுகள் கொண்ட பகுதிகளில் குழந்தைகளுக்கு எட்டாத வகையில் சிலிக்கான் ஜெல்லை கட்டி வைத்திருந்தால் தேவையில்லாமல் ஜன்னலில் ஈரப்பதம் அடையாமல் காக்க முடியும்.

ஷூ துர்நாற்றம்

பொதுவாக எல்லா வீடுகளிலும் நாம் எல்லோரும் சந்திக்கிற பிரச்சினை இது. என்னதான் துவைத்து பயன்படுத்தினாலும் ஷூக்கள், சாக்ஸ்களில் துர்நாற்றங்கள் ஏற்பட்டு விடுகிறது. அப்படி உண்டாகாமல் இருக்க செருப்புகள் வைக்கும் இடங்களில் இந்த சிலிக்கான் ஜெல்லைப் போட்டு வைத்திருந்தால் அந்த துர்நாற்றங்களில் இருந்து விடுபட முடியும்.

இவ்வாறு பல்வேறு விதங்களில் இந்த சிலிக்கான் ஜெல் பயன்படும். ஆனால் ஒருபோதும் இதை அதனுடைய பாக்கெட்டுகளில் இருந்து பிரித்து வெளியே எடுத்துப் பயன்படுத்திவிடக் கூடாது. பாக்கெட்டுகளை அப்படியே தான் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க...

சுரைக்காய் ஜூஸை அதிகமாகப் பருகினால் மரணமும் நிகழலாம்-எச்சரிக்கை!

Salt : உயிர்வாழ உப்பும் அவசியம்- உணர்ந்துகொண்டால், நோய்கள் நமக்கில்லை!

Amla benefits: குளிர்கால சிக்கல்களிலிருந்து உங்களை காக்கும் "நெல்லிக்கனி"- இயற்கையின் வரப்பிரசாதம்!!

உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சிறந்த உணவுகள்!

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் குளிர்கால உணவுகள்! நீங்களும் சாப்பிடுங்க!

English Summary: Uses of Silica gel Published on: 30 January 2019, 05:16 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.