1. வாழ்வும் நலமும்

ஆண்களின் சரும பாதுகாப்பு! பளபளப்பான மற்றும் ஒளிரும் சருமம் ஆண்கள் பெற எளிய வழிமுறை!

Aruljothe Alagar
Aruljothe Alagar

Men's skin care! The simplest way to get men with glowing and glowing skin!

பெண்களுக்கு மட்டும் தான் தோல் பராமரிப்பு போன்ற காலம் மாறி தற்போது ஆண்களும் தோல் பராமரிப்பிலிருந்து அனைத்தையும் செய்கின்றனர். அதிகமான ஆண்கள் இப்போது நல்ல சருமத்திற்காக முக கிரீம்கள், மாய்ஸ்சரைசர், ஸ்க்ரப்ஸ் மற்றும் பிற அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர். 

ஆண்களின் பல்வேறு தோல் வகைகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு தயாரிப்புகளுக்கும் வழிவகுத்தது. கூடுதலாக, கடுமையான வானிலை நிலைமைகளைக் கடந்து செல்லும் போது ஆண்களுக்கும் தோல் பராமரிப்பு தேவைப்படுகிறது என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஆண்களும் பெண்களும் தங்கள் சருமம் பிரகாசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

முகத்தில் இயற்கையான பளபளப்பைப் பேணுதல் மற்றும் சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்தல் ஆகியவை   ஒரு நல்ல சருமத்திற்கு தேவையான சில அடிப்படை விஷயங்கள்.

முகத்தை சுத்தம் செய்யும் முறை

ஆண்கள் வழக்கமாக ஷேவிங்கின் செய்வதால் ஆண்களுடைய முக அமைப்பு மற்றும் தோல், பெண்களின் தோலை விட கரடு முரடாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முகத்தில் காணப்படும் பெரிய துளைகள் அனைத்து வகையான அழுக்குகளையும் எண்ணெய் சுரப்பதையும் அதிகம் ஈர்க்கின்றன. இந்த நிலைமைகள் சுத்தம் செய்வதை மிக முக்கியமானதாக ஆக்குகின்றன.

உங்களது முகத்தை சுற்றுச்சூழல் மாசுபாடுகளில் இருந்து காக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒவ்வொரு சில மணிநேரமும் ஈரமான துடைப்பால் உங்கள் முகத்தை தவறாமல் சுத்தம் செய்யுங்கள். இந்த வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் முகப்பருக்கள் மற்றும் முகத் துளைகளில் அழுக்கு சேர்வதைத் தவிர்க்கலாம்.

ஈரப்பதமாக வைத்து கொள்ளுங்கள்

ஆண்களுக்கு ஒரு பொதுவான நம்பிக்கை என்னவென்றால், அவர்களுக்கு எண்ணெய் சருமம் இருப்பதால், மாய்ஸ்சரைசர் தேவையில்லை. இருப்பினும், ஒவ்வொரு சருமத்திற்கும் முகத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முன்கூட்டிய முதுமை தோற்றத்தை தடுக்கவும் மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது.

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தண்ணீர் சார்ந்த லேசான மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்யலாம்.

சன்ஸ்கிரீன் 

மாய்ஸ்சரைசரை பயன்படுத்தும் பொழுது சன்ஸ்கிரீன் போடுவதையும் வழக்கமாக கொள்ள வேண்டும், ஏனெனில் இது உங்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து தடுக்கிறது. சரும ஏற்படும் கருமையைத் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் சூரியனின் புற ஊதா கதிர்வீச்சின் வெளிப்பாடுதான் தோல் முதுமை அடைவதற்கு ஒரே பெரிய காரணம் ஆகும். வெளியே இருக்கும்போது ஒவ்வொரு 4 முதல் 6 முறை சன்ஸ்கிரீனை மீண்டும் பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது.

2 வாரங்களுக்கு ஒரு முறை ஸ்க்ரப் செய்யவும்

வாரத்திற்கு இரண்டு முறை ஸ்க்ரப் பயன்படுத்துவது சருமத்தின் மேல் அடுக்கிலிருந்து இறந்த சருமம் மற்றும் செல்களை வெளியேற்ற உதவுகிறது. ஸ்க்ரப்பிங் அசுத்தங்களை நீக்கும். ஸ்க்ரப்பிங்கிற்குப் பிறகு ஃபேஸ் மாஸ்க்கைப் பயன்படுத்துவது உங்கள் முகத்திற்கு சிறந்த விளைவுகளை தரும், ஏனெனில் அது ஈரப்பதமாக வைத்து கொண்டு முகத்தில் இருக்கும் துளைகளை இறுக்குகிறது.

மேலும் படிக்க...

Health Tips: ஆண்களின் கனிவான கவனத்திற்கு!

English Summary: Men's skin care! The simplest way to get men with glowing and glowing skin!

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.