முருங்கை இலைகள் உடலுக்கு மிகுந்த பலன்களை அளிக்கிறது. மேலும், மலேரியா, காய்ச்சல், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், ஒட்டுண்ணி நோய்கள் மற்றும் பல நோய்களைப் போக்க உதவுகின்றது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.
முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் முருங்கைக்காய், முருங்கை கீரை, முருங்கை பூ உள்ளிட்ட அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. மோரிங்கா ஓலிஃபெரா தாவரத்திலிருந்து முருங்கை வருகிறது. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவலாகப் பயிரிடப் படுகின்றது. வட மேற்கு இந்தியாவில் அதன் தோற்றம் இருக்கிறது. முருங்கை இலைகளின் சில நன்மைகள் கீழே ஒவ்வொன்றாகக் கொடுக்கப்படுகின்றன.
இதயத்திற்கு நல்லது: முருங்கை இலைகள் கொலஸ்ட்ரால் அளவினைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டு இருக்கின்றன. இதனால் இதய நோய் அபாயத்தினைக் குறைக்கிறது. “முருங்கை துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். அதோடு, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதோடு, இது நீரிழிவு நோயை நிர்வகிக்க அல்லது தடுக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது.
ஆரோக்கியமான சருமத்தினை வழங்குகிறது. முருங்கை இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினிகள் அதிகம் இருப்பதால் முருங்கை இலைகள் சருமப் பராமரிப்புக்கு ஏற்றதாக இருக்கின்றது.
தூக்கத்தினை மேம்படுத்த உதவுகிறது. தினமும் உட்கொள்ளும் உணவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து மதிப்பினை அதிகரிப்பது ஒரு சிறந்த உணவு, மேலும் அதிக தூக்கம் தருகின்றது. தூக்கம் மற்றும் ஊட்டச்சத்து இரண்டும் ஒன்றுக்கொன்று தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனை கட்டுப்படுத்த முருங்கை இலைகள் போன்ற சக்திவாய்ந்த உணவுகள் அவசியம். அவை ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. வைட்டமின்கள் மூலம் உடலை சுத்தப்படுத்துகின்றன மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
செரிமானத்திற்கு ஏற்றதாக அமைகிறது. முருங்கை இலைகளை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு உதவும். அல்சரேட்டிவ் கோலிடிஸ், இரைப்பை அழற்சி, வீக்கம் மற்றும் மலச்சிக்கல் இருப்பவர்கள் முருங்கை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
முருங்கை இலை தேநீராக பருகலாம். முருங்கை இலைகள் குறைந்த கொழுப்பு மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். அவை அதிக கலோரி உணவுகளுக்கு சிறந்த மாற்றாக அமைகின்றன. இவை கொழுப்பு சேமிக்கப்படுவதை விட ஆற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது. முருங்கை தேநீர் தயாரிக்க, இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடிக்க வேண்டும்.
முருங்கைப் பொடியாகச் செய்து உண்ணலாம். இந்த பொடியைப் பெரும்பாலும் தோசை, இட்லி மற்றும் பலவற்றுடன் பரிமாறப்படுகிறது. இது பொதுவாகப் பல்வேறு பருப்புகள், பூண்டு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த உலர் மசாலா அடிப்படை உணவுகளுக்கு ஒரு தனித்துவமான சுவையைச் சேர்க்கின்றது. இதேபோன்று செய்முறையில் பத்து மடங்கு நன்மையுடன் முருங்கை கீரைப் பொடி, முருங்கை இலைப் பொடி தயார் செய்து உட்கொண்டால் நல்ல பலன் அளைக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க
1000 ரூபாய் முதலீடு செய்தால் போதும்! 1 கோடி சேமிப்பு பெறலாம்!!
Share your comments