1. வாழ்வும் நலமும்

Natural Shampoo: இயற்கையான ஷாம்பூ தயாரிக்கும் முறைகள்!

Poonguzhali R
Poonguzhali R

Natural shampoo making simple methods!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முடி பற்றிய கவலை பெரிதாக உள்ளது. முடி உதிர்வது, முடி வளராமல் இருப்பது, முடி வெண்மை நிறமாக மாறுவது முதலான எண்ணற்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான முறையில் செய்யும் தீர்வுகள் உள்ளன.

பொதுவாக முடி என்றாலே நீளமாக இருக்க வேண்டும். கருமையாக இருக்க வேண்டும். அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று எண்ணற்ற ஆசைகள் பெண்களிடையே இருக்கின்றன. அதிலும் குறிப்பாகக் கல்லூரிப் பெண்களிடையே இது போன்ற ஆசைகள் நிறையவே இருக்கின்றன. அந்த ஆசையை எவ்வாறு நிறைவேற்றுவது, அதிலும் எந்த விதப் பக்க விளைவுகளும் இன்றி முடியை எவ்வாறு வளர்ப்பது என்று பல எண்ணங்கள் மனதில் ஓடிக்கொண்டே இருக்குஇயற்கையான முறையில் ஷாம்பூ செய்து தலைக்குப் பயன்படுத்தலாம்.

கடைகளில் கிடைக்கும் ஷாம்பூ-க்களில் வாசனைக்காக பல கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் நாளடைவில் அது முடிக்கே ஆபத்தாக முடிகின்றது. எனவே, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டே வீட்டில் சாம்பூ செய்து பயன்படுத்துவது நல்லது.

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் ஒரு ஸ்பூன் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
  • செம்பருத்திப் பூ 5, செம்பருத்தி இலைகள் (தேவையான அளவு) எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • இரண்டு சின்ன வெங்காயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவைத் தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • அதற்கெல்லாம் சிறு தீர்வாகத் தான் இந்த குறிப்பு.

ஷாம்பூ செய்முறை

செம்பருத்திப் பூ இதழ்கள், செம்பருத்தி இலைகள், ஊற வைத்த வெந்தயம், சின்ன வெங்காயம், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். நல்ல பேஸ்ட் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி தலையில் அப்ளை செய்வது?

நன்கு அரைத்த செம்பருத்தி இலை பேஸ்ட்-ஐ தலையின் எல்லா பக்கங்களிலும் தேய்க்க வேண்டும். முடியின் அடி முதல் நுனி வரை அனைத்துப் பகுதிகளிலும் தேய்த்துக் கொள்ள வேண்டும். தேய்த்துவிட்டு 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்துச் சிறிதுச் சிறிதாகத் தண்ணீர் விட்டுத் தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். தண்ணீர் விட்டுத் தேய்க்கத் தேய்க்க ஸாம்பூ போல் நுரை வருவதைக் காணலாம். பின்னர், சீகைக்காய் தூள் வைத்து தலையைக் கழுவ வேண்டும்.

பயன்கள்

  • முடி பளப்பளப்புடன் இருப்பதைக் காணலாம்.
  • முடியின் நிறம் கருமையாக மாற்றம் அடையும்.
  • முடி வலிமை பெறும்.
  • தலை குளிர்ச்சி அடைவதால் முடி நன்கு வளரும்.
  • முடி உதிர்வது குறையும்.

மேலும் படிக்க

தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழிகட்டும் செல்கள்!

அடிப்படை வசதிகள் வேண்டி கிராம மக்கள் கோரிக்கை!

English Summary: Natural shampoo making simple methods!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.