சாப்பாடு என வரும்போது, அதன் ருசியைக் கூட்டிக் கொடுக்கக் கூடியப் பொருட்கள் என சில பொருட்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானதும், நம் அனைவருக்கும் பிடித்தமானதும் ஒன்றுதான். அதுதான் நெய்.
நெய் சேர்த்தால் (If ghee is added)
நினைக்கும்போது அதன் சுவை நம் நினைவெல்லாம் நின்று பேசும்.
எந்த உணவானாலும் சரி, அதனுடன் நெய்யைச் சேர்த்துக்கொண்டால், அதன் சுவை அதிகரிக்கிறது. அதனால்தான் நெய்யை வேண்டாம் என வெறுப்பவர்கள் மிகச் சிலரே.
இருப்பினும் நெய்யைப் பற்றிய பலக் கருத்துக்கள் உள்ளன. எனினும், சிலர் எடை அதிகரிப்பு காரணமாக தவிர்த்துவருவதை நாம் பார்க்க முடிகிறது.
ஆனால் ஒரு நபர் ஒரு நாளைக்கு 3-6 தேக்கரண்டி நெய் சேர்க்காலம். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.
நெய்யின் உண்மையான ஆரோக்கிய பயன்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் அவற்றை நாம் எந்தெந்த உணவுகளில் பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
எவ்வளவு எடுத்துக்கொள்வது? (How much to take?)
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதன் அடிப்படையில், விகிதாசார அளவு நெய் சேர்க்க வேண்டும். நச்னி அல்லது ராகி போன்ற தினைக்கு, நீங்கள் பருப்பு மற்றும் அரிசியில் சேர்ப்பதை விட இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும்.
சுவையை மறைக்கக்கூடாது (Do not obscure the taste)
ஒரு உணவின் சுவையை அதிகரிக்க நெய் போதுமானது. ஆனால் உணவின் சுவையை மறைக்கும் அளவுக்கு நெய் சேர்க்க கூடாது.
நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமான பல வைட்டமின்கள் நிறைந்த ஒன்றாக நெய் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் ஒரு முறையாவது நெய் சேர்க்கப்பட வேண்டும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு ஒரு தேக்கரண்டி நெய் நல்லது.
ஆயுர்வேத மருந்து (Ayurvedic medicine)
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு.
இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்கு துணைமருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர்.
மருத்துவப் பயன்கள் (Medicinal uses)
-
ஒரு ஸ்பூன் நெய்யில் 14 கிராம் கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால், அது ஜீரண சக்தியைத் தூண்டுகிறது.
-
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
-
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது.இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
-
நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
-
கேன்சர், வைரல் நோய்களை தடுக்கிறது. நெய்யில் CLA - Conjulated Linoleic Acid உள்ளது.
-
இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது.
-
அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
-
ஞாபக சக்தியை தூண்டும்
-
சரும பளபளப்பைக் கொடுக்கும்
-
கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண் பார்வை தெளிவடையச் செய்யும்.
-
தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
-
குடற்புண் (அல்சர்) கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுறுபவர்கள் ஆகியோர், உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியைத் தூண்டும்.
மேலும் படிக்க...
இயர்போன் பயன்படுத்துவதால் இத்தனைப் பிரச்னைகள் வருமா!
சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!
Share your comments