வேர்க்கடலை கொண்டு தயார் செய்யக் கூடிய வெண்ணெய் (Butter) ஆனது, உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால், வேர்க்கடலையினால் கிடைக்கும் பல நன்மைகள் பற்றி நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இதில், கார்ப்ஸ் குறைவாகவும், மற்றும் புரதச்சத்து (Protein) அதிகமாகவும் உள்ளது. இந்த வேர்க்கடலையானது, ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் இன்னும் பல ஊட்டச்சத்துக்களையும் (nutrients) கொண்டிருக்கின்றன. மேலும், இது ஒரு சிறந்த சிற்றுண்டியாக விளங்குகிறது.
மார்பக புற்றுநோயை குணப்படுத்தும்:
நாம் ஆச்சரியப்படும் விதமாக, மற்ற விலை உயர்ந்த கொட்டைகளுடன் ஒப்பிடும் போது, இந்த வேர்க்கடலையில் அதிக புரதம் உள்ளது. வேர்க்கடலை உங்கள் மார்பக புற்றுநோயின் (breast cancer) அபாயத்தை குறைக்க உதவுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மார்பக புற்றுநோய் ஆனது, ஒரு தொற்றுநோயாக மாறி உள்ளது. இது போன்ற சூழ்நிலையில், உங்கள் உடல்நலம் மற்றும் உணவு முறையை கவனித்துக் கொள்வது என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.
ஆய்வு முடிவு:
பெண்ணோயியல் (Gynecology) மற்றும் மகப்பேறியல் புலனாய்வு இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், மற்ற கொட்டைகளுடன் சேர்த்து வேர்க்கடலையும் உட்கொள்வது, மார்பக புற்றுநோயின் அபாயத்தை இரண்டில் இருந்து மூன்று மடங்கு குறைத்தது என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே, வேர்க்கடலையை வழக்கமாக உட்கொள்வதன் மூலம், நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்!
இதய ஆரோக்கியத்தை காக்கிறது:
இன்று நீங்கள் எந்த மாதிரியான உணவு வகைகளை உட்கொண்டு வருகின்றீர்களோ, அது தான் சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் இதய ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும். மேலும், சிறிய அளவில் வேர்க்கடலையை சாப்பிடுவது, உங்கள் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். அது மட்டுமின்றி, இது இருதய நோயின் (heart disease) அபாயத்தைக் குறைக்க உதவும் என்று நம்பப்படுகிறது. அமெரிக்கன் நியூட்ரிஷன் கல்லூரியின் (American College of Nutrition) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வேர்க்கடலை நுகர்வானது உண்மையில் இருதய நோய் அபாயத்தை குறைக்கும் என்று முடிவு செய்து உள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
Share your comments