உயர் இரத்த அழுத்தம் பற்றி அதிகம் பேசப்பட்டு, அதன் அறிகுறிகள் மற்றும் விளைவுகள் பற்றி மக்கள் அறிந்திருந்தாலும், குறைந்த இரத்த அழுத்தம் பற்றி பலருக்குத் தெரியாது. உண்மையில், இது உலகம் முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கிறது.
பெரும்பாலும் மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணரவில்லை. இந்த குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் அடிக்கடி மயக்கம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் உணர்வார்கள். இது இதயம், நாளமில்லா சுரப்பி அல்லது சிக்னல் நரம்பியல் கோளாறுகளுடன் கூடிய தீவிரமான பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம் மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் பாய்வதைத் தடுக்கலாம். எனவே அதை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதற்கான சரியான வைத்தியத்தைத் தெரிவு செய்து சரிப்படுத்த வேண்டும்.
குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் சில வருமாறு:
நீர்ப்போக்கு/நீர் இழப்பு: போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்ல ஆரோக்கியமான வாழ்வுக்கு மிகவும் அவசியம். எளிதில் நீரிழப்புக்கு ஆளானவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அதற்கு நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். ஒருவர் நீர் இழப்பைத் தடுக்க அதிகமான திரவங்களை குடிக்க வேண்டும்.
கரு தரித்தல்: கர்ப்பமாக இருந்தால், இரத்த அழுத்தம் குறைய வாய்ப்புகள் அதிகம். இது சாதாரணமானது, ஆனால் இது அடிக்கடி இவ்வாறு குறைவு நடந்தால் உரிய மருத்துவத்தை அணுக வேண்டும்.
இதயப் பிரச்சனைகள்: சில இதயப் பிரச்சனைகளால் உடலில் இரத்தம் சரியாகச் செல்லாமல் போகலாம்.
ஊட்டச்சத்து குறைபாடு: பி-12 மற்றும் இரும்பு போன்ற சில அத்தியாவசிய வைட்டமின்களின் பற்றாக்குறை இரத்த சோகைக்கு வழிவகுக்கும். இது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இந்த குறைந்த இரத்த அழுத்ததிலிருந்து விடுபட தீர்வுகள்:
உப்பு உட்கொள்ளலை அதிகரிக்கவும்: பொதுவாக மக்கள் தங்கள் உணவில் அதிக உப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். ஆனால், குறைந்த இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உப்பு உதவலாம் எனக் கூறப்படுகிறது.
அதிக தண்ணீர் குடிக்கவும்: அடிப்படை உடல் செயல்பாட்டிற்கு தண்ணீர் அவசியம். இது நீரழிவைத் தடுக்கவும் உதவுகிறது. நீங்கள் தொடர்ந்து மயக்கமாக உணர்ந்தால், உங்கள் தண்ணீர் உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.
வீட்டு வைத்தியம்: ஒரு கப் பச்சை பீட்ரூட்டை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். குறைந்த இரத்த அழுத்தத்திற்கான சிறந்த வீட்டு வைத்தியம் இது. ஒரு கப் வலுவான கருப்பு காபி குடிப்பதும் உதவும். சிலர் பாதாமை பேஸ்ட் செய்து, வெதுவெதுப்பான பாலுடன் குடிக்க பரிந்துரைக்கின்றனர்.
உடற்பயிற்சி: தினசரி வேலைகளில் ஒரு சிறிய உடற்பயிற்சியைச் சேர்க்கவும். நடை மற்றும் விரைவான நீச்சல் இரத்தத்தை உடல் உறுப்புக்களுக்கு உந்த வைக்க உதவும்.
மேலும் படிக்க
Share your comments