பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை படும் பலர் இருக்கின்றனர். ஆனால், அதற்கான காரணம் தெரியாமல் புலம்புகின்றனர்வர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். பாதங்களைச் சுத்தமாகப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாததே காரணம் என்பதை மறுக்க முடியாது. இந்நிலையில் பாத வெடிப்பினைப் போக்கும் எளிய டிப்ஸ்-களை இப்பதிவில் பார்க்கலாம்.
பெரும்பான்மையாகப் பாத வெடிப்பு துன்பத்திற்கு பெண்களே ஆளாகின்றனர். இது போன்று பாத வெடிப்புகளால் அவதிப்படும் பெண்கள் அதற்கான சிகிச்சை பெற்றாலும் குணமாகாது எனக் கவலை கொள்கின்றனர். இதற்கான தீர்வு இயற்கை தாவரம், பழத்தைப் பயன்படுத்தி அடிக்கடி பாதத்தில் தடவினால் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
பாத வெடிப்பைப் போக்கும் வழிகள்
1. பப்பாளி பழத்தினை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்த்தல் வேண்டும். அவை உலர்ந்ததும் பாதத்தைத் தண்ணீரில் நனைத்து மறுபடியும் தேய்த்தல் வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!
2. மருதாணி இலைகளை நன்றாக அரைத்துப் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு எளிதில் குணமடையும்.
3. கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரைச் சூடாக்கி அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தைச் சிறிது நேரம் வைத்திருந்து பின்னர் பாதத்தைச் சொரசொரப்பான பிரஸ்சை கொண்டு தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுவது நிற்பதோடு பாதம் மென்மையாகவும் இருக்கும்.
4. வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு எளிதில் நீங்கும்.
5. தினமும் குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாத அளவிற்குத் துணியால் துடைக்க வேண்டும். அதன் பின்பு பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்தால் வெடிப்பு வராமல் எளிதில் தடுக்கலாம்.
6. விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமபங்கில் அளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து பேஸ்ட் போல குழைத்துக்கொண்டுப் பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு விரைவாகச் சரியாகி விடும். இத்தகைய இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிதில் பாத வெடிப்பினைக் குணமடைய செய்யலாம்.
மேலும் படிக்க
Share your comments