சமையல் என்பது ஒரு கலை தான் ஆனால் அந்த சமையலுக்கு சுவைகூட்டுவது அதில் இருக்கும் நறுமணப் பொருட்கள் (Spices) தான். நம் முன்னோர்கள் மூலம் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில சமையல் கலைகளில் முக்கிய பங்கு வகிப்பது ஏலக்காய், சோம்பு, கிராம்பு உள்ளிட்ட வாசனை பொருட்கள் தான்.
இன்றைய காலக்கட்டத்தில் நாம் எதை கடைப்பிடிக்கிறோமோ, இல்லையோ சமையலில் நாம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்கவழக்கங்களை மட்டும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறோம். இதில் வாசனைகாக பயன்படுத்தப்படும் பொருட்களும் அடங்கும். அப்படி பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம் வாருங்கள்
சோம்பு - Fennel
சோம்பு அல்லது பெருஞ்சீரகம் வயிற்றுப்புசத்திற்கு எதிராக செயல்படுகிறது. இது வயிற்று வலி, இரைப்பை குடல் வலி நீக்க பயன்படுகிறது.
பெருங்காயம் - Asafoetida
பெருங்காயம் நுண்ணுயிர் கொல்லியாக செயல்படுகிறது. இது கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் கக்குவான் இருமல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது குடல் வாய்விற்கு எதிராக செயல்படுகிறது. இது உடலில் நச்சு நீக்கும் நொதிகளின் அளவுகளை அதிகரிக்க உதவுகிறது.
கிராம்பு - Clove
கிராம்பு சீரண சக்தியை தூண்டுகிறது. மேலும் வாய்வு தொல்லை, நெஞ்செரிச்சல், குமட்டல், எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகளையும் குறைக்கிறது. கிராம்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள (Anti-oxidants) கல்லீரல் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி கல்லீரலை பாதுகாக்கிறது
கொத்தமல்லி - Coriander
கொத்தமல்லி விதை வாய்வு, வாந்தி மற்றும் வயிற்று கோளாறுகள் நீங்க பயன்படுத்தப்படுகிறது. புற்று நோய்க்கு எதிரான தாளிடேஸ் என்ற பாதுகாப்பு நொதியின் அளவை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது.
சீரகம் - Cumin
சீரகம் இரைப்பை குடல் வலி நீங்க பயன்படுத்தப்படுகிறது. உடலில் புற்று நோய்க்கெதிரான தாளிடேஸ் என்ற நொதியின் அளவை அதிகரிக்க உதவுகிறது. செரிமான பிரச்சனைகள் இருந்தால் சீரகத் தண்ணீரை குடிப்பதால் உடனடியான நிவாரணம் கிடைக்கும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
image credit: reviewsIN
வெந்தயம் - Fenugreek
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அல்லாத ரத்த குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த வெந்தயம் உதவுகிறது. இதில் நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றுக்கடுப்பிற்கு மோருடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
பூண்டு - Garlic
பூண்டு பல்வேறு செரிமான கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. பூண்டு சாறு கொழுப்பு அளவை குறைக்க மற்றும் இதய நோயை தடுக்க பயன்படுகிறது. இத பூஞ்சைக்கு எதிராகவும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது
இஞ்சி - Ginger
இஞ்சி மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி குறைக்கவும் பயன்படுகிறது. இது தலைவலியை நீக்கவும் உதவிசெய்கிறது. குமட்டலை தடுப்பதற்கும் பயன்படுகிறது.
கடுகு - Mustard
கடுகில் பூசண நச்சு விளைவுகளுக்கு எதிரான டைதையோல் தியோன்ஸ் என்ற கந்தக வேதிபொருள் உள்ளது. இதில் டைதையோன் என்ற வேதி பொருள் மந்ததன்மையை போக்கும் மருந்தாக பயன்படுகிறது.
மிளகு - Black pepper
மிளகு தொண்டை நோய் தாக்கத்திற்கு சூடான பாலுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.
Image credit : firstcry parenting
மஞ்சள் - Turmeric
மஞ்சள் நச்சு கழிவுகள், தீங்கு மருந்துகள், ரசாயன மருந்துகளிலிருந்து பாதுகாப்பு தருகிறது. மஞ்சள் உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது மற்றும் வயிற்றில் எரிச்சலை குறைக்கிறது. இது தொண்டை புண், இருமல், சளி, வயிற்றுப்புசம் எதிராக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் குர்குமின் என்ற வேதி பொருள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு எதிராக செயல்படுகிறது.
வெங்காயம் - Onion
பச்சை அல்லது சமைத்த வெங்காயம் குளுக்கோஸ் அளவை பராமரிக்க பயன்படுகிறது. வெங்காயம் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வெங்காயத்தில் உள்ள கந்தகம் நோ்மறை, எதிர்மறை பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படுகிறது. வெங்காய சாறு ஆஸ்பொ்ஜிலஸ் மற்றும் கேண்டிடா போன்ற பல நோய் பூஞ்சை வளர்ச்சியை தடுப்பதாக அறியப்படுகிறது. வெங்காயம் ரத்த கொழுப்பு மற்றும் கொழுப்பு அளவுகளை குறைக்க மற்றும் இதய நோய்களை தடுக்க பயன்படுகிறது.
கசகசா - Poppy Seeds
கசகசா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளதால், அது செரிமானத்திற்கு உதவும். இவை தூக்கமின்மையை போக்குகிறது, சிறுநீரகம், தைராய்டு, நீரிழிவு போன்ற நோய்களை கட்டுப்படுத்துகிறது, உடலுக்கு வலுசேர்கிறது
பிரியாணி இலை - Bay leaf
பெருங்குடலிலும், வயிற்றிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மருந்தாக செயல்படும் தன்மை இந்த இலையில் உள்ளது. இதிலுள்ள 'என்சைம்ஸ்' எனும் புரதப்பொருள், உணவை செரிமானம் செய்ய உதவுகிறது. பட்டை இலைகளில் உள்ள 'காஃபிக்' என்ற அமிலமும் 'ரூடின்' என்ற பொருளும் இதயத்தில் உள்ள மெல்லிய இரத்தக் குழாய்களை வலுவுறச் செய்வதோடு, உடலுக்கு தேவையற்ற கொழுப்பினையும் நீக்க வல்லது.
மேலும் படிக்க...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேநீர்கள்- உங்கள் கவனத்திற்கு
மூலிகைகளின் அரசி துளசியின் மருத்துவ குணங்கள் தெரியுமா உங்களுக்கு!
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் சூப்பர் உணவுகள்
Share your comments