1. வாழ்வும் நலமும்

அதிர வைக்கும் உணவுக் கலப்படம்- வீட்டிலேயேக் கண்டறிய எளிய டிப்ஸ் !

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Sunscreen Food Contaminants - Simple Tips To Find At Home!
Credit : Dinamalar

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது நம் உயிருக்கு உலை வைக்கும் விஷயம் என்றபோதிலும், வணிக ரீதியிலான வெற்றிக்காகவே இந்த முறை கையாளப்படுகிறது. அரசு மிகக் கடுமையான சட்டங்களை அமல்படுத்தினால், மட்டுமேக் கலப்படத்தைத் தடுத்து நிறுத்தமுடியும்.

வீட்டில் கண்டறியலாம் (Can be found at home)

இருப்பினும் நம்முடைய பொறுப்பை நாமும் தட்டிக்கழிக்காமல், வீட்டிலே சில எளிமையான நடைமுறைகளைக் கையாண்டு, கலப்படங்களைக் கண்டறியலாம்

இதுகுறித்து மதுரை உணவுபாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறுகையில்,

கலப்படம் (Impurity)

அதிக லாபம் என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே பெரும்பாலும், விலை உயர்ந்த உணவு பொருட்களில் கலப்படம் செய்கிறார்கள். அன்றாடம் உட்கொள்ளும் உணவு பொருட்களில் கலப்படங்களை வீட்டிலேயே எளிய பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

பாலில் வெள்ளைத் தடம் (White trail in milk)

பாலில் தண்ணீர் கலந்திருப்பதை கண்டறிய ஒரு சொட்டுப் பாலை பளபளப்பான சாய் தளத்தில் விட வேண்டும். கலப்படமில்லாத பால் அப்படியே நிற்கும் அல்லது மெல்ல வழிந்து வந்த இடத்தில் வெள்ளை தடம் இருந்தால் நீர் கலக்காத பால். நீர் கலந்த பாலை சாய் தளத்தில் விட்டதும் வழியும், தடம் இருக்காது.

டீத்தூள் (Tea powder)

  • இரும்பு தூள் கலந்த டீத்தூளைக் கண்டறிய ஒருத் தட்டில் டீத்தூளைக் கொட்டி, மேலே காந்தம் வைத்து நகர்த்த வேண்டும்.

  • இரும்பு தூள் இருந்தால் காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்.

  • டீத்தூளை கண்ணாடி டம்ளரில் துாவி சுடு தண்ணீர் ஊற்றுங்கள்.

  • நல்ல டீத்தூள் நிறம் மாற 3 நிமிடங்கள் ஆகும்.

  • கலப்பட டீத்தூள் என்றால் 30 வினாடியில் மாறும்.

தேங்காய் எண்ணெய் (coconut oil)

  • தேங்காய் எண்ணெயில் பிற எண்ணெய் கலந்திருப்பதை கண்டறிய கண்ணாடி டம்ளரில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பிரிட்ஜ் பிரீசரில் வையுங்கள்.

  • கலப்படமில்லாத எண்ணெய் உறைந்திருக்கும்.

  • கலப்படம் இருந்தால் உறைந்தும், கலக்கப்பட்ட வேறு எண்ணெய் உறையாமல் இருக்கும்.

தேன் (Honey)

  • கண்ணாடி டம்ளரில் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்க வேண்டும்.

  • தண்ணீரில் கரையாமல் தேங்கி நின்றால் அது சுத்தமான தேன்.

  • கரைந்தால் அதனுடன் சர்க்கரை கலந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை (Sugar)

  • சர்க்கரை மற்றும் வெல்லத்தில் 'சாக்பவுடர்' கலக்கப்படுகிறது.

  • இதனைக் கண்டறிய ஒரு ஸ்பூன் சர்க்கரையை ஒரு டம்ளர் நீரில் போடுங்கள்.

  • உண்மையான சர்க்கரையாக இருப்பின் சிறிது நேரத்தில் கரைந்து விடும்.

  • 'சாக் பவுடர்' கலந்திருந்தால் அது டம்ளரின் அடியில் தங்கிவிடும்.

 

மஞ்சள் தூள் (turmeric powder)

  • இதேபோல், மஞ்சள் தூளைக் கண்ணாடி டம்ளர் தண்ணீரில் கலக்கும் போது கீழிறங்கி வெளிர் மஞ்சள் திறத்தில் டம்ளரின் கீழே படிய வேண்டும்.

  • அடர்ந்த மஞ்சள் நிறத்தில் மிதந்தால் அது கலப்படமஞ்சள்.

தானியங்கள் (Cereals)

  • கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானியங்களை தண்ணீரில் போடும் போது அதில் செயற்கை நிறம் கலந்திருந்தால் தண்ணீரின் நிறம் மாறும்.

  • நிறம் மாறாமல் அப்படியே இருந்தால் அது தரமான தானியங்கள்.

மிளகாய் தூள், மிளகு (Chili powder, pepper)

  • மிளகாய்த் தூளைத் தண்ணீரில் கலக்கும் போது மிதக்க வேண்டும்.

  • மரத்துாள் கலந்த மிளகாய் துாள் நீருக்கு அடியில் தேங்கும்.

  • மிளகில் பப்பாளி விதைக் கலந்திருப்பதைக் கண்டறிய மிளகைத் தண்ணீரில் போட வேண்டும்.

  • அதில் இருப்பவை, பப்பாளி விதைகள் என்றால் தண்ணீரில் மிதக்கும்.

  • மிளகு என்றால் தண்ணீருக்கு அடியில் தங்கும்.

பச்சை நிற காய்கறி, பழங்கள் (Green vegetables, fruits)

  • பச்சை மிளகாய், பட்டாணி உள்ளிட்டப் பச்சைக் காய்கறி மற்றும்

    பழங்களை நீரில் மூழ்கும்படி வைக்க வேண்டும்.

  • அப்போது பச்சை நிறம் நீரில் கலந்தால் அதில் கலப்படம் உள்ளது என அர்த்தம்.

  • நீரின் நிறம் மாறாமல் காய்கறியும் அப்படியே இருந்தால் இயற்கையானது.

புகார் அளிக்க (To complain)

நாம் பாக்கெட் உணவு பொருட்கள் வாங்கும் போது ஒரு நிமிடம் செலவிட்டு, பாக்கெட்டில் பொருளின் பெயர், தயாரித்த தேதி, அதில் கலந்த பொருட்கள், நியூட்ரீஷியன் விவரம், பெஸ்ட் பிபோர் மற்றும் எக்ஸ்பியரி, எடை அளவு, பேக்கிங் கோட், பேட்ச் நம்பர், சைவமா அல்லது அசைவமா, தயாரிப்பு நாடு, ஊர், மாநிலம் ஆகிய தகவல்களை கவனிக்க வேண்டும்.

இதில் ஏதாவது முரண்பாடு அல்லது பயன்படுத்தும் போது கலப்படம் இருந்தால், உணவு பாதுகாப்புத் துறையின் 94440 42322 வாட்ஸ் ஆப் எண், unnavupukar@gmail.com மெயிலில் புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

விவசாயிகளை ஒன்றிணைத்து 5000 ஏக்கரில் முருங்கை விவசாயம் செய்ய இலக்கு!

காலையில் முருங்கை இலை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்ளுங்கள்!

தாய்மார்களுக்கு அதிக பலன் தரும் முருங்கை காய்

English Summary: Sunscreen Food Contaminants - Simple Tips To Find At Home! Published on: 29 July 2021, 07:42 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.