கோடைக் காலத்தில் உடலை மட்டுமில்லாமல் மனதையும் குளுமையாக வைத்திருக்கும் மிகச் சிறந்த இயற்கை பானம் தான் இளநீர். பொதுவாக அனைத்து நாட்களிலும் இளநீர் கிடைத்தாலும், கோடையில் வெயிலின் அனலைத் தவிர்க்க மக்கள் அதிகம் பேர் விரும்பி குடிப்பதுண்டு. இளநீரில் சர்க்கரை, கொழுப்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், குளோரின் மற்றும் வைட்டமின்-பி, வைட்டமின்-சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கி உள்ளன.
இளநீரின் பயன்கள் (Benefits of Coconut water)
- இளநீர் குழந்தைகளுக்கு டானிக் போன்றது. நோயாளிகளுக்கு மருந்து போன்றது.
- இளநீரும், வாழைப்பழமும் சாப்பிட்டால் அதைவிட சிறந்த சத்துணவு வேறு இல்லை.
- இளநீரில் மிகுந்த அளவில் தாதுச்சத்து உள்ளதால் இது உடலுக்கு அழகூட்டும் தன்மை கொண்டது.
- நரம்பு வியாதிகளைப் போக்கி நரம்புகளுக்கு சக்தியைக் கொடுக்கும்.
- தினமும் வெந்நீரில் சிறிது இளநீர் கலந்து முகத்தை அலசினால் போதும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் போன்றவை மறைந்து முகம் பொலிவு பெறும்.
- கோடைக் காலத்தில் அதிக தாகம், உடல் தளர்ச்சி, அசதி போன்ற உபாதைகள் நமக்கு விரைவில் ஏற்படுகின்றன. இச்சமயத்தில் நாம் இளநீர் குடித்தால் இதில் இருக்கும் தாதுப்பொருட்கள் வியர்வை மூலம் வெளியேறிய தாதுக்களை ஈடு செய்கிறது.
- கோடையில் ஏற்படும் சிறுநீர் கடுப்பைப் போக்க தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாகப் போகும்.
- உடம்பின் உஷ்ணத்தைக் குறைத்து குளிர்ச்சியூட்ட இளநீர்தான் பெரிதும் உதவுகிறது.
- இளநீரிலிருக்கும் சத்துக்களும், தாதுக்களும் இதயத் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதயத்துடிப்பை சீராக்குகின்றன.
- குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும்.
- தினமும் இளநீர் குடித்தால் உடல் சூடு தணியும்.
- சோர்வு நீங்கும்.
- வயிற்றுப்புண் ஆறும்.
- தாகத்தை தணிக்கும்.
மேலும் படிக்க
Share your comments