அதிகமான மக்கள் பச்சை மிளகாயை ஒதுக்கி வைக்கிறர்கள். ஆனால், சிலர் பச்சை மிளகாயை விரும்புகிறார்கள். பச்சை மிளகாயால் உணவின் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பிற ஆரோக்ய நன்மைகளும் இருக்கின்றன.
பல ஆராய்ச்சிகளில், பச்சை மிளகாய் சாப்பிடுவதன் மூலம் பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார வல்லுனர்களின் கூற்றுப்படி, பச்சை மிளகாயில் வைட்டமின் சி போதுமான அளவில் உள்ளது. இது பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து ஆரோக்யமாக வைத்திருக்க உதவுகிறது.
வைட்டமின் ஏ, பி 6, சி, இரும்புச்சத்து,பொட்டாசியம், புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகிய சத்துக்கள் பச்சை மிளகாயில் பெருமளவில் உள்ளது என்று உணவியல் நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறியுள்ளார். இதில் பீட்டா கரோட்டின், கிரிப்டாக்சாண்டின், லுடீன்-ஜீயாக்சாண்டின் போன்ற ஆரோக்கியமான பல தத்துவங்கள் உள்ளன. அவை உடலை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கின்றன.
பச்சை மிளகாய் பல கடுமையான தொற்றிலிருந்து பாதுகாக்கிறது
டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், உணவுச் சுவையைக் கூட்டும் பச்சை மிளகாய் சுவையுடன் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. பச்சை மிளகாயை உணவு சேர்ப்பது மூலம், பல கடுமையான நோய்களிலிருந்து விடு படலாம். இது எடையைக் குறைப்பதோடு இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், பச்சை மிளகாய் உங்களுக்கு இலாபகரமாக இருக்கும். ஏனெனில் இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. கொரோனா நெருடியில் பச்சை மிளகாய் சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு இதுவே காரணம். பச்சை மிளகாய் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகளவில் கொண்டுள்ளது, இது உடலில் பாக்டீரியாக்களை இல்லாமல் அகற்ற உதவுகிறது.
இரத்த ஓட்டம் சீராகிறது
பச்சை மிளகாயில் கேப்சைசின் எனப்படும் கலவை காணப்படுகிறது, இது மிளகாயின் காரத்தன்மைக்கு காரணமாக உள்ளது. மிளகாய் சாப்பிடுவது இரத்தத்தை சுத்திகரிக்க பயனளிக்கிறது. மேலும் இதனால் நரம்புகளில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். இதன் காரணமாக முகத்தில் உள்ள பருக்களின் பிரச்சனைக்கும் நிவாரணம் அளிக்கிறது.
பச்சை மிளகாய் சருமத்திற்கு நல்லது
பச்சை மிளகாய் உங்கள் முகத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி இதில் அதிகளவில் காணப்படுகின்றன. இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் கண்களுக்கும் இது நல்ல நன்மை பயக்கும்
பச்சை மிளகாய் கண்பார்வையை சீராக்க உதவுகிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ அதிகளவில் உள்ளது.இது கண்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது.
மேலும் படிக்க:
நெல்லிக்காயில் காணப்படும் அரிதான மருத்துவ குணங்கள்.
நாவற்பழத்தில் இருக்கும் கேடு விளைவிக்கும் குணங்கள்.
பற்களை பாதிக்கும் 5 மோசமான உணவுகள் ! அவசியம் பார்க்க வேண்டும்.
Share your comments