1. வாழ்வும் நலமும்

நெல்லிக்காயை சாப்பிடக்கூடாதவர்கள் இவர்கள் தான்..!!

Poonguzhali R
Poonguzhali R
These are the people who should not eat the healthy gooseberry..!!

ஆரோக்கிய நன்மைகளை கொண்ட நெல்லியை, சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மனித உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகையில் நன்மை சேர்க்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது நெல்லிக்கனி ஆகும். நெல்லியில் வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதனைத் தினமும் சாப்பிட்டு வந்தால் கண்கள் நன்றாக இருக்கும், கண் பிரச்னை உள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள். முடி உதிர்தலையும் குறைக்கிறது. நெல்லிக்காய் முடியை வலிமையாக்கும்.

கூந்தலை கருப்பாகவும் மாற்றும். இதில் அத்தியாவசமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. உடலில் இருக்கும் இறந்துபோன சரும செல்களை நீக்குகின்றன. அதேசமயத்தில் உடலில் புதிய செல்களை உருவாக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயை வைத்து ஃபேஸ் பேக் போட்டால் முகம் பளபளக்கும். கருப்பு புள்ளிகள் அகற்றும் என்றும், சுருக்கங்கள் குறையும் என்றும் தோல் இளமையுடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எதிர்ப்பு சக்தி: நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் உதவுகிறது. இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் பிரச்னை நீங்குகிறது. கல்லீரலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது. தினமும் ஒரு டம்ளர் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் மஞ்சள் காமாலை அபாயம் குறைக்கின்றன. பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட இந்த உணவுப் பொருளை, குறிப்பிட்ட நோய் பாதிப்புகளை கொண்டவர்கள் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றன.

சளித் தொந்தரவு: குளிர்காலத்தில் பலருக்கும் சளிப் பிடித்துவிடும். பொதுவாக நெல்லிக்காய் குளிர்ச்சியானது. அதை குளிர்காலத்தில் சாப்பிட்டால், ஏற்கனவே சளிப் பிரச்னை கொண்டவர்களுக்கு, மேலும் பாதிப்பு அதிகமாகும். அதனால்தான் ஜலதோஷம் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லிக்காயை சாப்பிடக்கூடாது. உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போதும் இதை சாப்பிட்டால் உடல் வெப்பம் இன்னும் குறையும். அதனால் உடல்நைலை சரியில்லாத போது, இதை யாரும் சாப்பிடுவது கூடாது எனக் கூறப்படுகிறது.

சிறுநீரக நோயாளிகள் : சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட நெல்லிக்காயை சாப்பிடவே கூடாது. ஏனெனில் நெல்லிக்காயை சாப்பிடுவதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கிறது. இது சிறுநீரகங்களை வடிகட்டுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் சிறுநீரகம் செயலிழந்து போகும் அளவுக்கு ஆபத்து அதிகரித்துவிடும்.

மேலும் படிக்க

ரூ.8000 கோடியைத் தாண்டிய கூட்டுறவு வங்கி பயிர் கடன்!

Pongal Scheme: பொங்கலுக்கு ரொக்கப் பணம் ரூ.1000! அப்ளை பண்ணிடுங்க!!

English Summary: These are the people who should not eat the healthy gooseberry..!! Published on: 03 December 2022, 04:39 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.