1. வாழ்வும் நலமும்

கொரோனா 3-வது அலையில் இருந்து தப்ப டிப்ஸ்- சித்த மருத்துவ வழிமுறைகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Tips to Escape the Corona 3rd Wave- Paranoid Medical Tips!

Credit : Phy.org

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை முடிவுக்கு வரும் நிலையில், அடுத்ததாக 3-வது அலைத் தயாராகி வருவதாக மருத்துவத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கொரோனா என்ற இந்த வார்த்தையே கடந்த இரண்டு ஆண்டுகளாக, நம்மை மிகவும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் முதல் அலையைக் காட்டிலும், 2-வது அலைத் தீவிரமாக இருந்தது ஒருபுறம் என்றால், ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கியது.

மருத்துவர்கள் எச்சரிக்கை (Doctors warn)

இந்த பாதிப்புகளில் இருந்து நாம் மீள்வதற்கும், கொரோனா 3-வது இன்னும் சில நாட்களில் வர உள்ளதாகவும், குறிப்பாகக் குறிவைத்துத்தாக்கும் தன்மை படைத்ததாக இருக்கும் எனவும், விளைவுகள் மிகவும் மோசமான நிலையை உருவாக்க உள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சித்த மருத்துவ வழிமுறைகள் (Sidha medical procedures)

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 3-வது அலையை எதிர்கொள்ளும் வகையில் படுக்கைகள் தயாராக உள்ளன. குறிப்பாக கொரோனா 3-வது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்கிற தகவல் வைரலாகி இருக்கிறது.

மாறுபட்டக் கருத்து (Dissenting opinion)

அதே நேரத்தில் 2-வது அலையிலேயே குழந்தைகளை கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ளதாகவும், 3-வது அலையில் தனியாக எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பெரியவர்களை போன்றே குழந்தைகளையும் கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்கிற கருத்தும் நிலவுகிறது.

கைகொடுத்த சித்த மருத்துவம் (Hand-held paranoia medicine)

கடந்த காலங்களில் கொரோனா நோயாளிகளுக்குப் பெரிதும் கைகொடுத்தது சித்த மருத்துவம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அந்த அளவுக்கு தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
முதல் அலையிலும் சரி, 2-வது அலையிலும் சரி கொரோனா நோயாளிகள் பலர் பக்கவிளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தால் குணம் அடைந்துள்ளனர்.

சித்த மருத்துவ மையம் (Sidha Medical Center)

கொரோனா 2-வது அலை தாக்குதலின் போதும் நோயாளிகள் நலன் கருதி தமிழக அரசு மாநிலம் முழுவதும் 50 மையங்கள் சித்த மருத்துவ சிறப்பு மையங்களைத் தொடங்கி இருக்கிறது. இங்கு கொரோனா நோயாளி களுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா 3-வது அலையில் இருந்து பொது மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இப்போதே தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல் பட வேண்டும் என சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லூரி விரிவுரையாளரான சாய் சதீஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

உணவில் கவனம் (Focus on diet)

கொரோனா 3-ம் அலையில் முன்னெச்சரிக்கையே முதல் மருந்தாகும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வரும் காலங்களில் மிகுந்த கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக அவர்கள் சாப்பிடும் உணவு வகைகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நோய் எதிர்ப்புச் சக்தி (Immunity

உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை அவர்களுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த வைரஸ் தொற்று காலத்தில் அனைவரும் வயிறு உபாதைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் நாம் பழங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதுளை, சாத்துக்குடி, எலுமிச்சை, அத்தி, வாழைப் பழங்களை அதிகம் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

உரை மாத்திரை (Text tablet)

குழந்தைகள், பெரியவர்களைப் போல பொறுமையாக மென்று சாப்பிட மாட்டார்கள். இதனால் சில நேரங்களில் அவர்களுக்கு செரிமான பிரச்சினை ஏற்படும். தறபோதுள்ள சூழலில் உடலில் செரிமான பிரச்சினை ஏற்படாமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக சித்த மருத்துவத்தில் உரை மாத்திரை குழந்தைகளுக்கான நல்ல செரிமான மருந்தாக உள்ளது.

6 மாதங்கள் (6 Months)

பெரியவர்களும் இதை சாப்பிடலாம். சிறிய அளவிலான உரை மாத்திரையை எடுத்து அதில் தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். அதுபோன்று தொடர்ந்து 6 மாதங்கள் இந்த மாத்திரையை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் செரிமான பிரச்சினை வராது.

10 மருத்துவ பொருட்கள் (10 medical supplies)

உரை மாத்திரையில் அதிமதுரம், வசம்பு, ஜாதிக் காய், கடுக்காய், பூண்டு, திப்பிலி, பெருங்காயம், இஞ்சி, அக்ரஹாரம் உள் ளிட்ட 10 மருத்துவ பொருட்கள் அடங்கி உள்ளது. இதனால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படாது.

கொரோனாவைத் தடுக்க (To prevent corona)

எனவே குழந்தைகளுக்குத் தயங்காமல் இந்த உரை மாத்திரையைக் கொடுத்து வரலாம். இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கும். கொரோனாத் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கு இது உதவும்.

அதிகத் தண்ணீர் (Too much water)

அதே நேரத்தில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாமலும் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதவிர சித்த மருத்துவ மருந்துகளான தாளிசாதி சூரண மருந்தையும் தேனில் கலந்துச் சாப்பிடலாம்.

பூண்டு தேன் (Garlic honey)

பூண்டு தேன் குழந்தைகளுக்கு நல்ல மருந்தாகும். இதனை வீட்டிலேயே தயாரிக்கலாம். 5 மில்லி பூண்டு தண்ணீரில் தேன் கலந்து தொடர்ந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவதன் மூலம் மூச்சுப்பாதையில் எந்தவித சுவாச பிரச்சினைகளும் ஏற் படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

மாம்பழம், பலாப்பழம் வேண்டாம் (Do not mango, jackfruit)

இந்த வைரஸ் தொற்று காலத்தில் குழந்தைகள் வயிற்றில் மந்தநிலையை ஏற்படுத்தும் பழங்களைத் தவிர்க்க வேண்டும். மாம் பழம், பலாப்பழம் ஆகிய வற்றை அதிகமாகக் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. இதன் மூலம் செரிமானப் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

வெயிலில் நிற்க (Stand in the sun)

தினமும் காலை வெயிலில் 5 நிமிடம் குழந்தைகளை நிற்க வைப்பது நல்லது. இதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி உருவாவதற்கு வைட்டமின் சத்து மிகவும் அவசியம்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொண்டால் நிச்சயம் கொரோனாத் தொற்றில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு சித்த மருத்துவர் சாய்சதீஷ் தெரிவித்துள்ளார்.

சந்தேகம் தீர (Coast of doubt)

சித்த மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்குத் தீர்வு காண ஒருங்கிணைந்த சித்த மருத்துவ கட்டளை மையத்தை 7358730363- என்ற இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்த எண் காலை 8மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படும்.

மேலும் படிக்க...

உடலுக்கு நஞ்சாகும் காய்கறிகள் - மக்களே உஷார்!

உளுந்தி ன் மருத்துவப் பயன்கள் - அறிந்து கொள்வோம்

தினமும் பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

English Summary: Tips to Escape the Corona 3rd Wave- Paranoid Medical Tips!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.